Lok Ayuktha (லோக் ஆயுக்தா) பற்றி குறிப்புகள்

 "தமிழ்நாடு லோக் ஆயுக்தா மசோதா 2018"

- நிறைவேற்றப்பட்ட நாள்- 09-07-2018

- 18வது மாநிலமாக தமிழகத்தில் அறிமுகம்

- அமைப்பு- 1+4 (1 தலைவர் மற்றும் 4 உறுப்பினர்கள்)

- தலைவர் தகுதி: லோக் ஆயுக்தாவின் தலைவர் உயர்நீதிமன்றத்தின் தற்போதைய அல்லது ஓய்வுபெற்ற நீதிபதியாக இருப்பார், அல்லது 25 ஆண்டுகள் பொது நிர்வாகத்திலோ, நீதித்துறையில் 25 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராகவோ இருப்பார்.

- உறுப்பினர்கள் நியமனம்: 

 - ஒரு உறுப்பினர் உயர்நீதிமன்ற நீதிபதியாகவோ, உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியாகவோ, நீதித்துறையில் 25 ஆண்டுகால அனுபவம் கொண்டவராகவோ இருப்பார். 

- லோக் ஆயுக்தாவின் நான்கு உறுப்பினர்களில் 2 பேர் நீதித்துறையை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

- ஒரு உறுப்பினர் - நீதித்துறையை சேராத உறுப்பினர்.

- லோக்ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஆளுநர் நியமனம் செய்வார். 

- லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை பரிந்துரைக்க தனியே குழு இருக்கும். 

- பரிந்துரை குழுவின் தலைவராக முதலமைச்சரும், உறுப்பினராக பேரவைத்தலைவரும், எதிர்க்கட்சித்தலைவரும் இருப்பர். 

- ஊழல் தடுப்புக்கொள்கையில் பொதுநிர்வாகத்தில், 25 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்ட நீதித்துறையை சாராத மேலும் ஒரு உறுப்பினர் இருப்பார். 

- லோக் ஆயுக்தாவின் தலைவர் அல்லது உறுப்பினர் நாடாளுமன்றத்தின் ஒரு உறுப்பினராகவோ அல்லது மாநில அல்லது மத்திய அரசின் ஆட்சி பகுதி ஒன்றின் சட்டமன்ற உறுப்பினராகவோ இருப்பார்.

- லோக் ஆயுக்தாவின் தலைவர் அல்லது உறுப்பினர்கள் குற்றம் எதற்காகவும் தண்டனை பெறாதவராகவும், பணியில் சேரும் தேதியன்று 45 வயதுக்கு மேற்பட்டவராகவோ இருப்பார்கள்.


"லோக் ஆயுக்தாவின் பணிகள்":

- பொது ஊழியர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை லோக் ஆயுக்தா விசாரிக்கும். 

- லோக் ஆயுக்தா வரம்புக்குள்  முதல்வர் உட்பட அனைத்து அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் அடங்குவர்

- லோக் ஆயுக்தாவில் தவறாக புகார் அளிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம்மும் ஒருவருடம் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும்.

Post a Comment

Previous Post Next Post