1)இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 370 உடன் தொடர்பு கொண்ட மாநிலம்_____
A) சிக்கிம்
B) ஜம்மு-காஷ்மீர்
C) கோவா
D) மேகாலயா
2) இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்பும் ஒருவரை குறைந்தது எத்தனை தேர்வுக் கல்லூரி அங்கத்தினர்கள் முன்மொழிதல் மற்றும் வழிமொழிதல் செய்ய வேண்டும்?
A) 5 B) 8 C) 9 D) 10
3)இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எந்த சரத்தின் அடிப்படையில் இந்திய அரசாங்கம் பாரத ரத்னா, பத்மஸ்ரீ விருதுகளை உருவாக்கியது?
A) சரத்து 14 B) சரத்து 16
C) சரத்து 18 D) சரத்து 21
4)துணை குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது______
A) மக்களவை உறுப்பினர்களால்
B) மாநிலங்களவை உறுப்பினர்களால்
C) A மற்றும் B
D) ஆளுநரால்
5)அடிப்படை உரிமைகளில் எந்த விதி பட்டங்கள் ஒழிப்பு பற்றியது?
A) விதி 15 B) விதி 16
C) விதி 17 D) விதி 18
6)இந்திய அரசியலமைப்பில் எந்த பகுதியில் "அவசரநிலை பிரகடனங்கள்" சேர்க்கப்பட்டிருக்கின்றன?
A) பகுதி 15 B) பகுதி 16
C) பகுதி 17 D) பகுதி 18
7)இந்திய அரசியலமைப்பில் எந்த பகுதி குடியுரிமை பற்றியது?
A) பகுதி 1 B) பகுதி 2
C) பகுதி 3 D) பகுதி 4
8)கீழ்க்கண்டவற்றுள் எந்த துணை சரியாக பொருந்தியுள்ளது?
A) தேர்தல்கள் - பகுதி 15
B) யூனியன் பிரதேசங்கள் - பகுதி 4
C) அடிப்படை கடமைகள் - பகுதி 5
D) குடியுரிமை - பகுதி 10
9)"சமதர்மம்" மற்றும் "சமய சார்பின்மை" என்ற வார்த்தை எந்த அரசியலமைப்பு திருத்தத்தின் படி முகப்புரையில் சேர்க்கப்பட்டது?
A) 41 B) 42 C) 46 D) 44
10)இந்தியா ______ கட்சி முறையை பெற்றுள்ளது.
A) ஒற்றைக் கட்சி முறை
B) இரு கட்சி முறை
C) பல கட்சி முறை
D) நான்கு கட்சி முறை
11)எந்த அரசியலமைப்பு திருத்தம் அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் 4 புதிய மொழிகளை சேர்த்தது?
A) 91வது சட்டத்திருத்தம்
B) 92வது சட்டத்திருத்தம்
C) 93வது சட்டத்திருத்தம்
D) 94வது சட்டத்திருத்தம்
12)நேரடி மக்களாட்சி நடைபெறும் நாடு எது?
A) அமெரிக்கா
B) இந்தியா
C) போர்ச்சுக்கல்
D) சுவிட்சர்லாந்து
13)பெண் விடுதலைக்காக இயற்றப்பட்ட சட்டங்களை கால வரிசைப்படுத்தி எழுதுக…
I.சாராத சட்டம் II. சதி ஒழிப்பு சட்டம்
III. வரதட்சணை தடை சட்டம்
IV. தேவதாசி ஒழிப்பு சட்டம்
A) I,II,IV,III. B) I,II,III,IV
C) II,I,III,IV. D) II,I,IV,III
14)டாக்டர் அம்பேத்கரால் இந்திய அரசியலமைப்பின் இதயமும் உயிரும் என வர்ணிக்கப்பட்ட அடிப்படை உரிமை எது)?
A) சமய உரிமை
B) சொத்துரிமை
C) சமத்துவ உரிமை
D) அரசியலமைப்பிற்குட்பட்டு தீர்வு காணும் உரிமை
15)மனித உரிமைகள் பிரகடனம் வெளியிடப்பட்ட ஆண்டு_______
A) 1947 B) 1948
C) 1949 D) 1950
16)உள்ளாட்சி அரசாங்கத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்?
A) ரிப்பன் பிரபு
B) செம்ஸ் போர்ட் பிரபு
C) கானிங் பிரபு
D) மௌண்ட் பேட்டன் பிரபு
17)வரதட்சணைத் தடைச் சட்டம் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஆண்டு?
A) 1952 B) 1961
C) 2000 D) 2011
18)எது சட்டத்தின் மூலாதாரம் இல்லை?
A) ஜாதி B) வழக்காறு
C) சட்டமன்றம் D) சமயம்
19) நீதிப்புணராய்வு எந்த நாட்டிலிருந்து பெறப்பட்டது?
A) அமெரிக்கா
B) இங்கிலாந்து
C) ஆஸ்திரேலியா
D) ஜப்பான்
20) எந்த கவுன்சில் சட்டம் இஸ்லாமியர்களுக்கு தனி வாக்காளர் தொகுதியினை அறிமுகப்படுத்தியது?
A) இந்திய கவுன்சில் சட்டம் 1861
B) இந்திய கவுன்சில் சட்டம் 1892
C) இந்திய கவுன்சில் சட்டம் 1909
D) இந்திய கவுன்சில் சட்டம் 1919