1) திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், தொடரை நிரப்புதல்.
Ø அணுவைத் துளைத்து ஏழ்கடலப் புகட்டிக் குறுகத் தரித்த குறள் - ஒளவையார்.
Ø மனித சமூதாயத்தை ஆழ்ந்து நோக்கி: அஃது எவ்வாறு வாழ வேண்டும் என்று நன்கு சிந்தித்து எழுதப்பட்ட நூல் - திருக்குறள்
Ø இதுபோன்ற ஒரு நூல் உலகில் எந்த மொழியிலும் இதுவரை தோன்றியது இல்லை எனப் போற்றப்படும் நூல்- திருக்குறள்.
Ø திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர்.
Ø திருவள்ளுவரின் சிறப்புப் பெயர்கள்:-
1)
முதற்பாவலர்
2)
பொய்யில் புலவர்
3)
செந்நாப் போதார்
4)
நாயனார்
5)
நான்முகனார்
6)
மாதானுபங்கி
7)
பெருநாவலர்
8)
தெய்வப்புலவர்
9)
தேவர்
10)
புலவர்
11)
பொய்யாமொழிப்புலவர்
Ø திருக்குறளின் பிற பெயர்கள்:-
1)
முப்பால்
2)
தெய்வநூல்
3)
பொய்யாமொழி
4)
உலகப்பொதுமறை
5)
பொதுமறை
6)
தமிழ்மறை
7)
வாயுறை வாழ்த்து
8)
தமிழர் திருமறை
9)
உத்தர வேதம்
10)
அறவிலக்கியம்
11)
திருவள்ளுவப்பயன்
12)
திருவள்ளுவம்
13)
பொருளுரை
14)
முதுமொழி
15)
முப்பாநூல்
16)
அறம் (புறநானூறு கூறுகிறது)
Ø தமிழ் நூல்களில் “திரு” - என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல்- திருக்குறள்.
Ø திருக்குறளின் மூன்று பகுப்புக்கள்:-
1)
அறத்துப்பால்
=
38
அதிகாரம்
2)
பொருட்பால்
=
70
அதிகாரம்
3)
இன்பத்துப்பால்
=
25
அதிகாரம்
மொத்தம்
=
133
அதிகாரம்
Ø அதிகாரத்திற்கு பத்து குறள்கள் வீதம் 133 குறட்பாக்கள் கொண்டுள்ளது.
Ø வாய்மை எனப்படுவது - தீங்கிதராத சொற்கள் பேசுதல்.
Ø பொறாமை உள்ளவன் செல்வம் - சான்றோர்களால் ஆராயப்படும்.
Ø பொறாமை இல்லாதவருடைய வறுமை - சான்றோர்களால் ஆராயப்படும்.
Ø பொருட்செல்வம் = பொருள் + செல்வம்.
Ø யாதெனில்+ யாது + எனில்
Ø தன்நெஞ்சு = தன் + நெஞ்சு
Ø தீதுண்டோ= தீது + உண்டோ
Ø எழுத்தென்ப = எழுத்து + என்ப
Ø கரைந்துண்ணும் = கரைந்து + உண்ணும்
Ø கற்றனைத்தூறும் = கற்றனைத்து + ஊறும்
Ø நாடென்ப= நாடு + என்ப
Ø கண்ணில்லது = கண் + இல்லது
Ø உள்ளத்த்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன் - என்ற குறளுக்கு ஏற்ப வாழ்ந்தவர்- காந்தியடிகள்.
Ø செய்யத்தகுந்த செயல்களைச் செய்யாமல் இருப்பதால் தீமை உண்டாகும் எனக்கூறும் நூல் - திருக்குறள்.
Ø தன் குடியைச் சிறந்த குடியாகச் செய்ய விரும்புபவரிடம் சோம்பல் இருக்க்க்கூடாது எனக்கூறும் நூல்- திருக்குறள்.
Ø கற்கும் முறை = பிழையில்லாமல் கற்றல்
Ø உயிற்க்குக் கண்கள் = எண்ணும் எழுத்தும்
Ø விழுச்செல்வம் = கல்வி
Ø எண்ணித்துணிக = செயல்
Ø கரவா கரைந்துண்ணும் = காகம்
Ø அரண் எனப்படுவது - தெளிந்த நீர், நிலம், மலை, அழகிய நிழல் உடைய காடு ஆகிய நான்கும் உள்ளதே அரண்.
Ø மக்கள் அனைவரும் பிறப்பால் ஒத்த இயல்புடையவர்கள் எனக்கூறும் நூல் - திருக்குறள்.
Ø பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் - திருக்குறள்.
Ø சுறுங்கச்சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர் - திருவள்ளுவர்
Ø திருவள்ளுவர் வாழ்ந்த காலம் கிமு 31 - ம் ஆண்டு
Ø குறள் வெண்பாக்களால் அமைந்த நூல்.
Ø திரு என்ற அடைமொழியை பெற்று திருக்குறள் என அழைக்கப்படுகிறது.
Ø உலகம் ஏற்கும் கருத்துக்களைக் கொண்டுள்ளதால் உலக பொதுமறை என அழைக்கப்படுகிறது.
Ø தமிழ் மொழியில் உளள அறநூல்களில் முதன்மையானது.
Ø 107 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
Ø மனிதன் மனிதனாக வாழ மனிதன் மனிதனுக்கு கூறிய அறிவுரை திருக்குறள்.
Ø திருக்குறள் கற்பதனால்:-
1) மனித வாழ்க்கை செம்மையுறும்.
2) பண்புகள் வளரும்.
3) உலகெலாம் ஒன்றெனும் உயர் குணம் தோன்றும்.
4) மனிதர்கள் இடையே வேறுபாடுகள் மறையும்.
5) எல்லா உயிர்களிடத்தும் அன்பு தழைக்கும்.
Ø உடல் நீரைத் தூய்மை செய்யும் உள்ளத்தை தூய்மை வெளிப்படுத்துவது-வாய்மை .
Ø தமிழ்மொழி அழகான சித்திர வேலைப்பாடு அமைந்த வெள்ளித்தட்டு,திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள் - என்று கூறியவர் Dr.கிரெளல்.
Ø தமிழ் என்னை ஈர்த்தது குறளோ என்னை இழுத்தது என்று கூறியவர் டாக்டர் Dr.கிரெளல்.
Ø திருக்குறள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று.
Ø உலகில் வாழும் மக்கள் அனைவருக்கும் சிறப்பான அறங்களை வலியுறுத்தியவர் திருவள்ளுவர்.
Ø வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்றவர் பாரதியார்
Ø வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்று கூறியவர் பாரதிதாசன்
Ø நாடு, மொழி, இனம், சமயம் எல்லாம் கடந்து எக்காலத்துக்கும் பொருந்துவதாக அமைந்துள்ள நூல் திருக்குறள்
Ø மக்கள் வாழ்வில் அடையத்தக்க உறுதிப் பொருள்கள்:-
1) அறம், 2) பொருள், 3) இன்பம்
Ø திருக்குறளை இலத்தின் மொழியில் மொழிபெயர்த்தவர் வீரமாமுனிவர் (அறம் & பொருள்)
Tags:
Tamil Study Materials