Indian Polity And INM important Notes Full | Tnspsc Material Free test

TNPSC IMPORTANT QUESTIONS



 *இந்தியா தனது அரசியல் அமைப்பின் ஏற்பை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதியைக் குடியரசு நாளாகக் கொண்டாடுகிறது..*

 *இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பற்றிய சிறு தகவல்கள் உங்கள் பயனுக்காக...* 

 *இந்தியாவுக்கு என்று ஒரு அரசியல் அமைப்புச் சட்டம் வேண்டும் என்று முதன்முதலில் முன்மொழிந்தவர் எம். என். ராய்* 

 *இந்திய அரசியல் நிர்ணய சபை தோற்றுவிக்கப்பட்ட நாள் டிசம்பர் 6 ,1946.* 

 *அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் கூடிய நாள் டிசம்பர் 9, 1946.*

 *இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற இடம் புதுடில்லி.* 

 *அரசியல் நிர்ணய சபையின் தலைவராகப் பணியாற்றியவர்- டாக்டர்.ராஜேந்திர பிரசாத்.* 

 *இந்திய அரசியலமைப்பு எழுது வரைவுக்குழுவின் தலைவராக (Drafting committee) செயல்பட்டவர் டாக்டர். அம்பேத்கார் அவர்கள்.*

 *நமது இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் நவம்பர் 26,1949.* 

 *இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் ஜனவரி 26 ,1950.* 

 *இந்த அரசியலமைப்பு சட்டம் எழுத 2 வருடங்கள் 11 மாதங்கள் 18 நாட்கள் ஆகியுள்ளன.* 

 *இந்த அரசியலமைப்புச் சட்டத்தை எழுதுவதற்கு உண்டான அப்போதைய செலவு 64 லட்சம் ஆகும்.*

 *உலகிலேயே மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பு சட்டம் நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆகும்.*

 *நமது இந்திய அரசியலைப்பு சட்டம் பிரிட்டிஷ் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை தழுவி எழுதப்பட்டதாகும்..* 

 *இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது அரசியலமைப்பில் இருந்த சரத் களின் எண்ணிக்கை 395.* 

 *தற்போது இந்திய அரசியலமைப்பில் உள்ள சத்துக்களின் எண்ணிக்கை 448, பகுதிகள் - 25, அட்டவணைகள் -12 ஆகும்.* 

 *இந்திய அரசியலமைப்பின் படி இந்தியாவின் பெயர்- பாரத்.*

 *அரசியலமைப்பின் இதயமாகவும், ஆன்மாவாகவும் உள்ள பகுதி என்று டாக்டர் அம்பேத்கர் அவர்களால் வர்ணிக்கப்பட்ட பகுதி- அரசியலமைப்பு தீர்வு உரிமைகள் ( ஷரத்து 32).*

 *ஆகவே இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமையாக இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்த நாள் இன்று ஜனவரி 26.* 

 *இந்த நன்னாளில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதிய சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களை நினைவு கூறுவோம். அவர் வழி சட்டத்தை பின்பற்றி நடப்போம்.* 

 *டாக்டர். அம்பேத்கர் அவர்கள் சாதித் தலைவர் அல்ல....*

 *அவர் சாதித்த தலைவர்.* *நாம் என்ன சாதிக்கு பிறந்தோம் என்பது முக்கியமல்ல..*

 *என்ன சாதிக்க பிறந்தோம் என்பதே முக்கியம்.* 


 🌞Tnpsc important questions🌞 💫

தென்னாட்டு திலகர் என்று போற்றப்பட்டவர் யார்? - வ.உ.சி

 💫வங்க பிரிவினை நடைபெற்ற போது இந்திய அரசு பிரதிநிதியாக இருந்தவர் யார்? - கர்சன் பிரபு 

 💫ஆகஸ்ட் நன்கொடை அளித்த ஆங்கில அரசு பிரதிநிதி யார்? - லின்லித்தோ 

 💫முற்போக்கு கட்சியை தொடங்கியவர் யார்? - சுபாஷ் சந்திரபோஸ் (1939) 

 💫இரு நாடுகள் கொள்கையை வெளியிட்டவர் யார்? - முகம்மது அலி ஜின்னா 

 💫ஆசாத் ஹிந்த் ஃபாஜ் என்றுஅழைக்கப்பட்டது எது? - இந்திய தேசிய ராணுவம் 

 💫 கிரிப்ஸ் தூதுக்குழு யோசனைகளை "பின் தேதியிட்ட காசோலை" என்று வர்ணித்தவர் யார்? மோ.க.காந்தி

 💫தனி நபர் சத்தியாக்கிரகம் தொடங்கியவர் யார்? - ஆச்சார்யா வினோபா பாவே 

 💫"வகுப்பு கொடை" அறிவத்த பிரிட்டிஷ் பிரதமர் யார்? - ராம்சே மெக்டொனால்ட்

  💫வகுப்பு கொடையை எதிர்த்து மோ.க.காந்தி எந்த சிறையில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார்? - எரவாடா சிறை

  💫சைமன் குழு எதிர்ப்பு போராட்டத்தில் தடியடி பட்டு படுகாயம் அடைந்தவர் யார்? - லாலா லஜபதி ராய்

  💫 "பஞ்சாப் சிங்கம்" என்று போற்றப் பட்டவர் யார்? - லாலா லஜபதி ராய்

  💫'வறுமையும் இந்தியாவில் பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும்' என்ற நூலை எழுதியவர் யார்? - தாதாபாய் நௌரோஜி 

 💫இரண்டாவது தனிநபர் சத்தியாக்கிரகம் நடத்தியவர் யார்? - ஜவஹர்லால் நேரு 

 💫பூரண சுயராஜ்யம் (அல்லது) முழுச் சுதந்திரம் எந்கு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது? - லாகூர் (1929) 

 💫சுயராஜ்ய கட்சி யாருடைய மறைவிற்கு பின்னால் பலவீனமடைந்தது? - சி.ஆர்.தாஸ்

 💫இந்தியப் பிரிவினைக்கான திட்டத்தை அறிவித்தவர் யார்? - மவுண்ட்பேட்டன் பிரபு

Post a Comment

Previous Post Next Post