NITI Aayog Important Notes | Tnpsc | TET | SSC | POLICE | Exam Important Test Notes | Economic test Notes

                   நிதிஆயோக்

                      


அறிமுகம்:


- 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 -ம் தேதி மத்திய அரசாங்கமானது அறுபத்தி ஐந்து ஆண்டு பழமையான திட்டக்குழுவை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக புதிய அமைப்பு அமைக்கப்படும் என்று அறிவித்தது.


- அதன்படி ஜனவரி 1, 2015 அன்று திட்டக்குழுவின் தொடர்ச்சியாக நித் ஆயோக்கை நிறுவியது. (இந்தியாவை மாற்றுவதற்கான தேசிய நிறுவனம்)


- இந்திய அரசின் நிறைவேற்றுதல் தீர்மானத்தின் மூலம் நிதி ஆயோக் ஆனது. நிறுவப்பட்டது.


- இது ஒரு அரசியலமைப்பு சார்ந்த அமைப்போ அல்லது சட்டப்பூர்வ அமைப்போ அல்ல.


- நிதி ஆயோக் என்பது இந்திய அரசாங்கத்தின் முதன்மையான கொள்கையான Think Tank ஆகும்.


- இந்த அமைப்பானது கொள்கை சார்ந்த வழிகாட்டுதலையும் உள்ளீடுகளையும் வழங்குகிறது.


- திட்டக் கமிஷன் சகாப்தத்தின் தனிச்சிறப்பாக உள்ள மையத்திலிருந்து மாநிலத்திற்கு ஒருவழிக்கொள்கையின் மூலம் இணைந்த உறவினை ஏற்ப்படுத்துவதற்காக நிதி ஆயோக் செயல்படுகிறது.


- நிதி ஆயோக்கின் கூட்டாட்சி தன்மையில் இதன் கொள்கையானது மேல்-கீழ் மாதிரியை காட்டிலும் கீழ்-மேல் அணுகுமுறையால் வடிவமைக்கப்பட்டுள்ளது.


நிதி ஆயோக் உறுப்பினர்களின் கலவை:


கீழ்க்கண்ட முறையில் நிதி ஆயோக்கின் அமைப்பானது கொண்டுள்ளது. உறுப்பினர்களைக்


தலைவர்: இந்தியாவின் பிரதமர்


ஆட்சிக்குழு: அனைத்து மாநிலங்களின் அட்மன்றங்களை கொண்டுள்ள ஒன்றியப் பிரதேசங்களான டெல்லி முதலமைச்சர்கள் அச்சேரியின் முதலமைச்சர் மற்றும் ஒன்றிய பிரதேசங்களி துணைநிலை ஆளுநர்கள்.

பிராந்திய குழு:

இவை ஒன்றிற்கும் மேற்பட்ட மாநிலங்கள் அல்லது ஒரு பிராந்தியத்தை பாதிக்கும் குறிப்பிட்ட சிக்கல்கள் மற்றும் தொடர்ச்சியான பிரச்சனைகளுக்கு தீர்வுகான உருவாக்கப்படுகின்றன. இந்தக் குழுக்களுக்கு நிதி ஆயோக்கின் தலைவர் அல்லது அவர் பரிந்துரைத்தளின்படி, தலைவர் நியமிக்கப்படுவார்.


சிறப்பு அழைப்பாளர்கள்: பிரதமரால் பரிந்துரைக்கப்பட்ட நிபுணர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் கள அறிவு கொண்ட நிபுணர்கள்.


முழுநேர நிறுவனக்கட்டமைப்பு: பிரதமரைத் தலைவராகக் கொண்டும்


கீழ்கண்ட உறுப்பினர்களைக் கொண்டும் உருவாக்கப்படுகிறது.


துணைத்தலைவர் : பிரதமரால் நியமிக்கப்படுகிறார். இவர் கேபினட் அமைச்சருக்கு இணையான தகுதி பெற்றவர்.


முழுநேர ஊழியர்கள்: மாநில அமைச்சருக்கு இணையான அந்தஸ்தினை உடையவர்கள்.


பகுதிநேர ஊழியர்கள்: அதிகபட்சம் இரண்டு உறுப்பினர்கள் முக்கியமான பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அதற்கு இணையான நிறுவனங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றன. சுற்று முறையில் இவர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.


அலுவல் சார்ந்த ஊழியர்கள்: அதிகபட்சம் நான்கு உறுப்பினர்கள் பிரதமரால் ஒன்றிய கவுன்சிலிலிருந்து நியமிக்கப்படுகின்றனர்.


தலைமை நிர்வாக அதிகாரி: பிரதமரால் ஒரு நிலையான காலத்திற்கு நியமிக்கப்படுகிறார் இந்திய அரசாங்கத்தின் செயலாளர் தகுதிக்கு இணையானவர்.


செயலகம்: அவசியமாக கருதப்படுகிறது.


நிதி ஆயோக் சிறந்த நிர்வாகமான 7 தூண்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.


1. மக்கள் சார்பு - சமூகம் மற்றும் தனிநபர்களின் தேவைகளை பூர்த்தி செய்தல்


2. செயல்திறன் சார்பு - குடிமகனுக்கு தேவைப்படும் எதிர்பார்ப்புகள் மற்றும் செயல்திறன்கள்


3. பங்கேற்பு குடிமகனின் ஈடுபாடு 4. மேம்பாடு - அனைத்து அம்சங்களிலும் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல்


5. அனைத்தையும் உள்ளடக்கியது.

6. சமத்துவம் - இளைஞர்களுக்கான வாய்ப்பு


7. வெளிப்படைத் தன்மை - அரசாங்கத்தின் பொறுப்பான பார்வை


இது நீடித்த நிலையான வளர்ச்சியை மேற்பார்வையிடவும், ஒருங்கிணைக்கவும், மற்றும் செயல்படுத்தவும் செயல்படும்.


நிதி ஆயோக் என்பது இந்திய அரசின் திட்டங்களையும் கண்காணிக்கும் அறிவு மையமாகும். கொள்கைகளையும்


தேசிய மற்றும் சர்வதேச பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நடைமுறைகளையும், புதிய கொள்கைகளையும் ஏற்படுத்தவும், தனிப்பட்ட பிரச்சினைகளுக்கான ஆதரவையும் தரும்.


இது சார்ந்த சாதனைகளை புரிந்து கொள்ள தனிப்பட்ட ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும்.


நிதி ஆயோக்கின் பணிகள்


1. கூட்டுறவு மற்றும் போட்டி அடிப்படையிலான கூட்டாட்சி


மாநிலங்கள் நாட்டின் கொள்கை வடிவமைப்பதில் துடிப்புடன் பங்கெடுக்கத் தேவையானவற்றை செய்வது


2. நாட்டின் நிகழ்வுகளின் மாநிலங்களைப் பங்கெடுக்க வைத்தல்


நாட்டின் முன்னேற்றத்திற்கான முன்னுரிமைகள் மற்றும் உத்திகளில் மாநிலங்களையும் இணைத்துக் கொள்ளுதல்


3. பரவலாக்கப்பட்டத் திட்டமிடல்


திட்டமிடல் நடைமுறையை கீழிருந்து மேல் என்ற முறையில் மாற்றம் கொண்டு வருதல்


4. தொலைநோக்கு மற்றும் காட்சித் திட்டமிடல்


நநட்டின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு இடைக்கால மற்றும் நீண்டகா தொலை நோக்கு கட்டமைப்பை வடிவமைத்தல்


5. நிபுணர்களின் கூட்டமைப்பை உருவாக்குதல்


அரசின் கொள்கைகளை வடிவமைப்பதாலும், திட்டங்களை செயல்படுத்துவதாலும்  அரசுக்கு வெளியில் உள்ள நிபுணர்கள் ஒன்றிணைந்து பங்கு பெற வைத்தல்

6.உகந்ததாக்குதல்

அரசின் பல படிநிலைகளில் பணியாற்றுபவர்களை குறிப்பாக பலதுறைகள் ஒன்றிணைந்து செயல்படுமிடங்களில் ஏற்படும் பிரச்சனைகளை களைய தொடர்பு கொள்ளுதல், ஒருங்கிணைத்தல், கைகோர்த்தல் மற்றும் கூட்டிணைத்தல் மூலம் உகந்த பணியை நிதி ஆயோக் செய்கிறது.


7. சச்சரவுத் தீர்த்தல்


அரசுத் திட்டங்களை வேகமாக செயல்படுத்த மாநில மைய அரசுகளுக்கு இடையில், மாநிலங்களுக்கிடையில், அரசுத் துறைகளுக்கிடையில் மற்றும் பிற துறைகளுக்கிடையில் நிலவும் சச்சரவுகளுக்குத் தீர்வுக்கான ஒரு தளத்தை அமைத்துக் கொடுக்கிறது.


8. வெளியுலகத் தொடர்பை ஒருங்கிணைத்தல்


வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனைகளையும் பன்னாட்டு நிறுவனங்களிலிருந்து கிடைக்கும் நிதி வளங்களையும் நாட்டின் முன்னேற்றத்துக்குப் பயன்படும் வகையில் பெற்றுத்தரும் பொறுப்பு அலுவலகமாக நிதி ஆயோக் செயல்படும்.


9. உள்நாட்டு ஆலோசனை வழங்குதல்


கொள்கைகள் மற்றும் திட்டங்கள் வகுக்க மாநில மற்றும் மைய அரசுகளுக்கு ஆலோசனைகளை வழங்குகிறது.


10. திறன் உருவாக்குதல்


அரசுத் துறைகளில் திறனை வளர்க்கவும் தொழில் நுட்பத்தை மேம்படுத்தவும், உலக அளவில் தற்போது நடைமுறையில் உள்ள தர அளவுகோள்களை கொண்டும், மேலாண்மை நுட்பங்கள் வழியாகவும் திறன் உருவாக்கும் பணியையும் நிதி ஆயோக் செய்கிறது.


11. கண்காணித்தல் மற்றும் மதிப்பிடுதல்


அரசு செயல்படுத்தும் திட்டங்களை நிதி ஆயோக் கண்காணித்து அதன் விளைவுகளை மதிப்பீடும் செய்கிறது.


அடல் புத்தாக்க கொள்கை, ஆயூஸ்மான் பாரத் அணுகுமுறை ஆகியவை தண்ணீர் வளங்களை பாதுகாக்கும் விதமாகவும்,

இந்திய மருத்துவ கழகத்திற்கு தேசிய மருத்துவ வாரியம் என பெயர் மாற்றம் செய்வதற்கும் நாடாளுமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது நிதி ஆயோக்.


நிதி ஆயோக் ஒரு பெரிய அளவிலான பொறுப்புணர்வைக் கொண்டு வருகிறது.


இது பல்வேறு அமைச்சகங்களின் செயல்திறன் குறித்த தரவுகளை சேகரிக்கும் மேம்பாட்டு கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அலுவலகத்தை நிறுவியுள்ளது.


அத்தகைய தரவைப் பயன்படுத்தி, போட்டி கூட்டாட்சிவாதத்தின் உணர்வை வளர்ப்பதற்கு செயல்திறன் அடிப்படையிலான மாநிலங்களின் தரவரிசையை ஆயோக் செய்கிறது.


நிதி ஆயோக்கின் வெற்றியை கணிசமான காலத்திற்குப் பிறகு மதிப்பீடு செய்யலாம்.

Post a Comment

Previous Post Next Post