02.03.24 - Current Affairs
1.தேசிய செய்தி
கடந்த பிப்ரவரியில் நாட்டில் ரூ.1.68 லட்சம் கோடி சரக்கு மற்றும் சேவை வரி (ஜி எஸ்டி) வசூலாகியுள்ளது.
2. ஸ்ரீராமர் குறித்த புகைப்படங்கள் அடங்கிய அஞ்சல் தலைகளை தலைமை அஞ்சல் தலைவர் பி.பி. ஸ்ரீதேவி வெளியிட்டார்.
3. நாட்டின் 225 மாநிலங்களவை எம்.பி.க்களில் 33 சதவீதம் பேர் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் 31 எம்.பிக்களின் (14 %) சொத்து மதிப்பு ரூ.100 கோடிக்கும் அதிகமாக இருப்பதாகவும் ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) தெரிவித்துள்ளது.
4.கூகுள் நிறுவனத்தின் வலைதளப்பதிவில் மக்களவைத் தேர்தலின் போது தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க 'சக்தி' எண்ணும் புதிய திட்டத்தை கூகுள் நிறுவனம் தொடங்கியுள்ளது.
5. கென்யா நாட்டின் நைரோபியில் நடைபெற்ற 6-ஆவது ஐ நா சுற்றுச்சூழல் பேரவைக் கூட்டத்தில் நீடித்த வாழ்க்கை முறைக்கான இந்தியாவின் தீர்மானம் வெள்ளிக் கிழமை ஏற்றுக்கொள்ளப்பட்டது. >சுற்றுப்புறச்சூழலுக்கான வாழ்க்கைமுறை இயக்கம்' (லைஃப்) 2022 -ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
6. இந்தியாவில் கடந்த 2022-ஆம் ஆண்டில் 5-19 வயதுக்குட்பட்ட 73 லட்சம் சிறுவர்கள் மற்றும் 52 லட்சம் சிறுமிகள் உள்பட சுமார் 1.25 கோடி பள்ளி வயது குழந்தைகள் அதிக அடையுடன் இருப்பதாக 'தி லான்செட்' இதழில் வெளிவந்துள்ளது.
விளையாட்டு செய்தி
7. புரோ கபடி லீக் போட்டியின் 10-ஆவது சீசனில், புணேரி பல்தான் 29-25 என்ற புள்ளிகள் கணக்கில் ஹரியாணா ஸ்டீலர்ஸை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
8.வெளிநாட்டு செய்தி
உலக வர்த்தக அமைப்பு (டபிள்யூடிஓ) கூட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்த தங்கள் நாட்டு தூதரான பிம்சனாக் வோன்கொர்போன் என்பவரை அப்பதவியில் இருந்து நீக்கியுள்ளது தாய்லாந்து அரசு.