Subscribe and Follow on More Study Materials and Online Test Questions our Channel
தினசரி நடப்பு நிகழ்வுகள் | அரசு பணி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் பயன்பெறும் வகையில் தகவல்கள் தரப்படுகிறது.
TNPSC |TET | SSC | RAILWAY | POLICE EXAMS
Daily Current affairs In download in PDF
Link in Below
தேசிய செய்திகள்
1. இந்திய விமானப்படையின் முன்னாள் தலைமைத் தளபதி
ஆர்.கே.எஸ். பதௌரியா பாஜகவில் இணைந்தார்.
2. முன்னாள் காங்கிரஸ் எம்.பியும் தொழிலதிபருமான
நவீன் ஜிண்டால் பாஜகவில் இணைந்தார்.
3. நாட்டின் துணிச்சலின் தலைநகராக லடாக் திகழ்வதாக
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
4. விண்வெளித் துறையில் சாதிக்க விரும்பும்
நாடுகளுக்கு இந்தியா கலங்கரை விளக்கமாக திகழ்கிறது என்று உலக பொருளாதார அமைப்பின்
(WUEF) 4-ஆவது தொழிற்புரட்சி மைய செயற்குழு உறுப்பினர்
செபாஸ்டியன் தெரிவித்தார்.
விளையாட்டு செய்திகள்
1. நெல்லை பிரண்டஸ் சார்பில் நடைபெறும் பி ஜான்,
ஏ.கே. சித்திரைப் பாண்டியன் நினைவு மாநில வாலிபால் போட்டியில் மகளிர் பிரிவில்
ஐசிஎஃப், தமிழ்நாடு போலீஸ் அணிகள் வெற்றி பெற்றன.
2. சென்னையில் நடைபெற்ற கேலோ இந்தியா சீனியர்
பெண்கள் நீச்சல் தொடர் போட்டியில் தமிழகம் 5 தங்கம் வென்றது.
3. சென்னை சூப்பர் கிங்ஸ் அகாதெமி சார்பில்
சிறப்பாகசெயல்பட்ட தமிழக இளம் வீரர், வீராங்கனைக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
மறைந்த தமிழக கிரிக்கெட் வீரர்கள் வி.பி.
சந்திரசேகர், டிஜே. கோகுலகிருஷ்ணனை கௌரவிக்கும் வகையில் அவர்களது பெயரில்
விருதுகள் வழங்கப்படுகின்றன. சிறுவர் பிரிவில் வி.பி. சந்திரசேகர் விருது அக்ஷய்
சாரங்கதருக்கும், சிறுமியர் பிரிவில் டி.ஜே. கோகு லகிருஷ்ணன் விருது
ஜே.கமலினிக்கும் வழங்கப்பட்டன. சிஎஸ்கே சிஇஓ கே.எஸ். விஸ்வநாதன், நியூஸிலாந்து
வீரர் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் விருதுகளை வழங்கிப் பாராட்டினர்.
மாநில செய்திகள்
1. கந்திலி அருகே விஜயநகர மன்னர் ஆட்சிக் கால
புலிக்குத்திப்பட்டான் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
·
திருப்பத்தூர்
மாவட்டம், கந்திலி அருகே கும்மிடிகாம்பட்டி அடுத்த கரகப்பூசாரி வட்ட பகுதியில் திருப்பத்தூர் தூய நெஞ்சக்
கல்லூரி தமிழ்த் துறை உதவி பேராசிரியர் ஆ.பிரபு, சமூக ஆர்வலர் வே.ராதாகிருஷ்ணன்,
ஆய்வு மாணவர் தரணி தரன் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.
·
அப்போது
தனியாருக்குச் சொந்தமான நடுவே 4 நடுவ மாந்தோப்பின் அரை அடி அகலமும், 4 அடி உயரமும்
கொண்ட புலிக் குத்திப்பட்டான் கல் கண்டெடுக்கப்பட்டது.
·
கிழக்கு
நோக்கிய வாசல் அமைப்பு கொண்ட கற்திட்டைக்குள் சிற்பம் காணப்படுகின்றது.
பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பமாக நடுகல் அமைந்துள்ளது. இதில் முன்னங்கால்களைத்
தூக்கியபடி வாயைப் பிளந்த நிலையில் தாக்க வரும் புலியை வீரன் அதன் ஆபரணமும் வாயில்
தன் இடது கையால் 'கட்டாரி'யால் குத்திய நிலையில், வலது கையில் பெரிய வாளினை ஏந்தி,
தாக்க முற்படும் நிலையிலும் காட்டப்பட்டுள்ளது.
உடன்கட்டை ஏறிய செய்தி:
·
அந்த
வீரனின் நீண்ட காதுகளில் குண்டலமும், கழுத்தில் சரப்பளி என்ற இரண்டடுக்கு
கழுத்தணிஆபரணமும் காணப்படுகின்றது. கைகளில் காப்பினையும், கால்களில் கழலும்
அணிந்துள்ளார். இடுப்பில் அழகிய சிறிய உடைவாள் மற்றும் கச்சும் குஞ்சமும் கூடிய
ஆடையை அணிந்து முருக்கு மீசையுடன் கம்பீரமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
வீரனுக்கு அருகில் சிறிய அளவில் அவரது மனைவியின் உருவம் காணப்படுகிறது. அதில் வலது
கையில் கள் குடுவையும் இடது கையினை மேல் நோக்கி உயர்த்தியபடியும்
வடிக்கப்பட்டுள்ளது. அதாவது வீரன் இறந்த நிலையில் அவரோடு உடன் கட்டை ஏறிய அவரது
மனைவியை நினைவு கூர்வதை இது குறிக்கிறது. கல்லின் மேல் பகுதியில் மாவிலைத்
தோரணமும் மலர்களும் செதுக்கப்பட்டுள்ளன.
உயிர் நீத்த வீரர்களுக்கு நடு
கல்:
·
பழங்காலத்தில்
கால்நடைகளை உணவாக உட்கொள்ள வரும் புலியானது, சில நேரங்களில் மனிதர்களையும்
தாக்கிக் கொல்லும். அத்தகைய சூழலில் புலியை கொன்று கால்நடைகளையும், ஊர்மக்களையும்
பாதுகாக்கும் எண்ணத்தில் வீரர்கள் புலியை வேட்டையாடுகையில் அதனுடன் சண்டையிட்டு
புலியைக் கொன்று, அதனால் ஏற்பட்ட பலத்த காயத்தால் தம் உயிரை நீத்த வீரர்களுக்கு
நடுகல் எடுத்துப் போற்றும் வழக்கம் நம்தமிழகத்தில் இருந்தது.
·
இவ்வாறு
வீர மரணம் அடையும் வீரனின் நினைவாக எடுக்கப்படும் நடுகற்கள் புலிக்குத்திப்பட்டான்
நடுகற்கள்' என அழைக்கப்படுகின்றன.
·
எழுத்துப்
பொறிப்புகள் ஏதும் இல்லாத நிலையில் இந்த நடுகற்களின் சிற்ப வேலைப்பாடுகள், ஆபரணம்,
ஆயுதம் ஆகியவற்றின் அமைப்பினை பார்க்கும் போது விஜயநகர மன்னர்கள் ஆட்சிக்காலத்தைச்
சேர்ந்தவையாக இருக்கலாம்.
·
'கட்டாரி'
என்ற ஆயுதம்...: வீரன்வைத்துள்ள கட்டாரி' என்ற ஆயுதம் இந்திய துணைக் கண்டத்தைப்
பூர்வீகமாகக் கொண்ட ஒரு குத்துவாள் வகையாகும். நடுவிரல், ஆள்காட்டி விரலுக்கு
இடையில் வைத்து பயன்படுத்தும் இந்தக் குத்துவாளின் கைப்பிடியா னது 'ஏ' வடிவில்
இருக்கும். இது வடமொழியில் கட்டாரா அல்லது கட்டாரி என மருவியது. 14-ஆம்
நூற்றாண்டில் விஜயநகர பேரரசு காலத்தில் இந்தக் கருவி புழக்கத்தில் இருந்ததாக
ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
Important Current affairs pdf available
25- 03-2024 - Current affairs-Click Here
23- 03-2024 - Current affairs- Click Here
20- 03-2024 - Current affairs- Click Here
19- 03-2024 - Current affairs- Click Here
16- 03-2024 - Current affairs- Click Here
14- 03-2024 - Current affairs- Click Here
13- 03-2024 - Current affairs- Click Here
12- 03-2024 - Current affairs- Click Here
11- 03-2024 - Current affairs- Click Here
10- 03-2024 - Current affairs- Click Here
09- 03-2024 - Current affairs- Click Here
08- 03-2024 - Current affairs- Click Here
07- 03-2024 - Current affairs-Click Here
06- 03-2024 - Current affairs- Click Here
05- 03-2024 - Current affairs- Click Here
04- 03-2024 - Current affairs- Click Here
CHANNEL LINK
CHANNEL LINK
YOUTUBE LINK Link
TELEGRAM LINK Link