Home Tamil model test questions | online test questions |TNPSC# TET# POLICE# RRB byTNPSC LEARN •March 30, 2024 0 1➤ கீழ்க்காணும் கூற்றுகளைக் காண்க. 1. "விளைந்து முதிர்ந்த விழுமுத்து" என்று மதுரைக்காஞ்சி கூறுகிறது. 2. "புகார்த்துறையில் கட்டப்பட்ட படகுகள் யானைபோல் அழகாக அசைந்தன" என மதுரைக்காஞ்சி கூறுகிறது. 3. யவணர்கள், பொன்னை சுமந்து வந்து அதற்கு ஈடாக மிளகை ஏற்றிச் சென்றனர் என அகநானூறு கூறுகிறது. 1 pointA) அனைத்தும் சரிB) கூற்று 1 மட்டும் தவறுC) கூற்று 2 மட்டும் தவறுD) கூற்று 3 மட்டும் தவறு2➤ அகர வரிசைப்படி அமைந்துள்ளதைக் கண்டறிக. 1 pointA) எழிலி, எழில், எழால், எழல்B) எழில், எழல், எழால், எழிலிC) எழால், எழில், எழிலி, எழல்D) எழல், எழால், எழிலி, எழில்3➤ கீழ்க்காணும் கூற்றுகளைக் காண்க. 1. எட்டயபுரம் மன்னர்களின் பரம்பரை வரலாறு பற்றிக் குறிப்பிடும் நூல் - வம்சமணி தீபிகை 2. வம்சமணி தீபிகை வெளியிடப்பட்ட ஆண்டு 1879 3. வம்சமணி தீபிகை நூலின் மூலவடிவம் மறுபதிப்பாக 2008 இல் அப்படியே வெளியிட்டவர் கவிகேசரி சாமி தீட்சிதர். 1 pointA) அனைத்தும் சரிB) கூற்று 1 மட்டும் தவறுC) கூற்று 2 மட்டும் தவறுD) கூற்று 3 மட்டும் தவறு4➤ ஆய்தொடி நல்லாய் இலக்கணக் குறிப்பறிக. 1 pointA) இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகைB) மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகைC) நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகைD) ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை5➤ 1. "எவ்வகைச் செய்தியும் உவமங்காட்டி" 2. "மையறு படிவத்து வானவர் முதலா எவ்வகையுயிர்களும் உவமங் காட்டி" மேற்காணும் அடிகள் இடம்பெற்ற நூல்கள் முறையே 1 pointA) மதுரைக்காஞ்சி, மணிமேகலைB) மணிமேகலை, மதுரைக்காஞ்சிC) சிலப்பதிகாரம், மணிமேகலைD) மணிமேகலை, சிலப்பதிகாரம்6➤ "சாதி சமய வேறுபாடுகளை மறக்கக் கற்றுக்கொள், மறக்க முடியாவிட்டால் புறக்கணிக்கக் கற்றுக்கொள்" என்றவர் யார்? 1 pointA) முத்துராமலிங்கத் தேவர்B) பெரியார்C) அம்பேத்கர்D) மு. வரதராசனார்7➤ ஒருமை பன்மை பிழையற்ற தொடரைத் தேர்வு செய்க. 1 pointA) வண்டுகள் தேன் குடித்ததுB) விண்கலங்கள் விண்ணில் பறந்ததுC) கோல மயில்கள் ஒயிலாக ஆடியதுD) முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா8➤ "சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் தாங்காது மண்ணோ பொறை" இக்குறட்பாவில் பயின்று வரும் எதுகை யாது? 1 pointA) பொழிப்பு எதுகைB) கூழை எதுகைC) இணை எதுகைD) முற்று எதுகை9➤ கரைதல், பேசுதல், கூவுதல், அலப்புதல் ஒலி மரபு கொண்ட அஃறிணைகள் முறையே, 1 pointA) சேவல், கிளி, குரங்கு, காகம்B) கிளி, காகம், சேவல், குரங்குC) காகம் கிளி, சேவல், குரங்குD) சேவல், குரங்கு, கிளி, காகம்10➤ பொருந்தாததைத் தேர்க? 1 pointA) கான்ஸ்டான்டிண் ஜோசப் பெஸ்கி B) ஆறுமுகநாவலர்C) சுல்தான் அப்துல் காதிறு D) ஜார்ஜ் யூக்ளோ போப்11➤ நாயக்கர் ஆட்சிக்காலத்தில் தோன்றிய நாடகம் எது? 1 pointA) குறவஞ்சி நாடகம்aB) பள்ளுC) கோவில் நாடகம்D) நொண்டி நாடகம்12➤ "நாடகச் சாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து" என்பது யாருடைய கூற்று? 1 pointA) பம்மல் சம்பந்தனார்B) பரிதிமாற் கலைஞர்C) கவிமணிD) சங்கரதாசு சுவாமிகள்13➤ குமரகுருபரர் எழுதாத நூல் எது? 1 pointA) கந்தர்கலி வெண்பாB) குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ்C) மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ்D) முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழ்14➤ "இவருடைய ஈர்ப்பான இலக்கிய நடையின் உயரவுக்குக் காரணம், ஆங்கிலத்தில் அவருக்கு இருந்த அறிவு மட்டுமன்று தம்முடைய தாய்மொழிமீது அவருக்கு இருந்த பற்றுதலும் தான் என்று யாரைக் குறிப்பிட்டுள்ளார் காந்தியடிகள்? 1 pointA) முன்சிராம்B) இரவீந்திரநாத் தாகூர்C) மதன்மோகன் மாளவியாD) நேரு15➤ "நற்றிறம் படராக் கொற்கை வேந்தே "-யார், யாரிடம் கூறியது? 1 pointA) வாயிற்காவலன் அரசனிடம் கூறியதுB) கண்ணகி அரசனிடம் கூறியதுC) பொற்கொல்லன் அரசனிடம் கூறியதுD) கோவலன் அரசனிடம் கூறியது16➤ பொருத்துக.A) Entrepreneur -1. பண்டம் B) Adulteration - 2. பயணப் படகுகள் C) Ferries - 3. கலப்படம் D) Commodity -4. தொழில்முனைவோர் 1 pointA) 4321 B) 3412C) 2134 D) 421317➤ "கம்பரமாயணம் நிகரற்ற வாழ்க்கை அனுபவக் கருவூலம், வால்மீகியே இதனைப் படிக்க நேர்ந்தால் ஒரு புதுமைக் காப்பியத்தின் தழுவல் என ஒப்பார்" என்று கூறியவர். 1 pointA) தமிழண்ணல்B) மா. இராசமாணிக்கனார்C) டாக்டர் மு.வD) கா. சுப்பிரமணியப்பிள்ளை18➤ "மலையும் கடலும் ஒரு நாட்டின் இயற்கை எல்லைகளாக அமைவது என்பது தவப்பயனாகும். அதை ஓரளவேனும் தமிழகம் பெற்றது என் வாழ்நாள் மகிழ்ச்சி" என்று கூறியவர்? 1 pointA) காயிதேமில்லத்B) ம.பொ.சிவஞானம்C) முத்துராமலிங்கர்D) வ.உ.சி19➤ "அறம் பெருகும் தமிழ்படித்தால் அகத்தில் ஒளிபெருகும் திறம் பெருகும் உரம் பெருகும்" என்று கூறியவர்? 1 pointA) பெருஞ்சித்திரனார்B) பாவேந்தர் பரதிதாசன்C) தேவநேயப்பாவாணர்D) இரா, இளங்குமரனார்20➤ மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக. 1 pointA) அரியவற்றுள் அரிதே. பெரியாரை எல்லாம்B) அரியவற்றுள் எல்லாம் அரிதே, பெரியாரைC) அரியவற்றுள் எல்லாம். பெரியாரை அரிதேD) பெரியாரை எல்லாம். அரியவற்றுள் அரிதே21➤ காவலரை' பிரித்தெழுதுக. 1 pointA) காவலர் + ஐB) கா + அலரைC) கா + வலரைD) காவல் + அரை22➤ சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்க. 1 pointA) திருமலை நாயக்கர் மதுரையை தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தார்.B) வணிகர், புலவரின் பேச்சுக்குத் தன் இசைவை தெரிவிக்கவில்லை.C) கணக்கைப் போலவே தமிழிலும் சொற்களைப் பகுபதம், பகாப்பதம் என இருவகையாகப் பிரிக்கலாம்.D) மக்களாய் பிறந்தவர் அறிவைத் தேடிப் பெறுதல் வேண்டும்.23➤ தொழில் முறை நாடக அரங்குகளைப் பற்றிய செய்திகளை நன்கு ஆராய்ந்து நூல் எழுதியவர் மற்றும் அந்நூலின் பெயர் முறையே 1 pointA) பரிதிமாற் கலைஞர், நாடகவியல்B) பம்மல் சம்மந்தனார், நாடகத்தமிழ்C) மகேந்திரவர்மன், மத்தவிலாசம்D) விபுலானந்தர், மதங்க சூளாமணி24➤ கீழ்க்கண்ட திருவாசகம் பற்றிய கூற்றுகளில் தவறானதைத் காண்க. 1. 41 திருப்பதிகங்கள் காணப்படுகிறது. 2. 658 பாடல்கள் உள்ளன. 3. 38 சிவத் தலங்கள் பற்றி பாடப்பட்டுள்ளது. 4. திருச்சாழல், திருப்பெருந்துறை ஆவுடையார் கோவிலில் பாடப் பெற்றது. 1 pointA) அனைத்தும் சரிB) 1, 3 சரி 2.4 தவறுC) 1, 4 தவறு 2, 3 சரிD) 1, 3, 4 தவறு 2 சரி25➤ கண்ணே கருத்தேயென் கற்பகமே கண்ணிறைந்த விண்ணே என்று இறைவனை பாடியவர்? 1 pointA) மாணிக்கவாசகர்B) தாயுமானவர்C) நாவுக்கரசர்D) வள்ளலார் SubmitYou Got Facebook Twitter