ஜவஹர்லால் நேரு
* நேரு அவர்கள் நவம்பர் 14,1889 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தை மோதிலால் நேரு தாய் ஸ்வரூப் ராணி நேரு ஆவார்.
* இவர் இந்தியாவின் முதல் பிரதமர் ஆவார். இவர் பண்டிட் நேரு எனவும் பண்டித நேரு எனவும் அழைக்கப்பட்டார்.
* நேரு குழந்தைகள் மீது அதீத அன்பு கொண்டிருந்தார். குழந்தைகள் இவரை அன்போடு நேரு மாமா என அழைத்தனர்.
* இதனால் தன்னுடைய பிறந்தநாளான நவம்பர் 14 அன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
* நேருவுக்கு சமஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிகள் தெரிந்து இருந்தன.
* இவரின் மனைவி கமலா நேரு. இவரின் மகள் இந்திரா காந்தி. பேரன் ராஜிவ் காந்தி.
கல்வி:
* நேரு தன்னுடைய பள்ளி வாழ்க்கையை ஹரோவில் முடித்தார். ஆனால் அவருக்கு அங்கு படிக்க விருப்பமில்லை.
* பள்ளி படிப்பு முடிந்ததும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நுழைவு தேர்வுகளை 1907ல் எழுதினார்.
* பின்னர் திரினிட்டி கல்லூரியில் இயற்கை அறிவியல் படித்தார்.
* நேரு அவருடைய திரைபோசில் இரண்டாவது இடம்பெற்று1910 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார்.
அரசியல்:
* 1916: லக்னோவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் தனது தந்தையுடன் சென்று காந்தியை சந்தித்தார்.
சிறை வாழ்க்கை:
* 1921 ஆம் ஆண்டு நேரு முதல் முறையாக சிறைக்கு சென்றார். அவர் 9 வருடங்கள் தன்னுடைய வாழ்நாளை சிறையில் கழித்தார்.
* நேரு சிறையில் இருந்த நாட்களில் சில நூல்களை எழுத தொடங்கினார்.
* 1934 - உலக வரலாற்றின் காட்சிகள்.
* 1936 - சுயசரிதை மற்றும் இந்தியாவின் கண்டுபிடிப்பு.
* நேரு காந்தியின் வழிகாட்டுதலில் காங்கிரசின் இடதுசாரி தலைவரானார்.
* நேரு ஆங்கில அரசின் பிடியிலிருந்து இந்தியாவின் சுதந்திரத்தை மீட்டு எடுத்தார்.
* நேரு சிறையில் இருந்த போது இவரின் மகளான இந்திரா காந்திக்கு கடிதம் எழுதினார்.
* வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கெடுத்ததற்காக நேரு 1945 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 கைது செய்யப்பட்டார்.
* இந்தியாவின் முதல் பிரதமராக ஆகஸ்ட் 15ல் பதவி ஏற்றார்.
* அவரின் தொடக்க உரையாக " விதியுடன் போராட்டம் " எனும் தலைப்பில் பேச தொடங்கினார்.
* நேரு இந்தியாவின் திட்டக்குழுவை உருவாக்கி முதல் ஐந்தாண்டு திட்டத்தை 1951 ஆம் ஆண்டு வரைந்தார்.
* நேருவின் வாழ்க்கையை பற்றி குறும்படம் எடுக்கப்பட்டது.
* இந்தியா முழுவதும் பொது நிறுவனங்கள் மற்றும் நினைவகங்கள் நேருவின் நினைவிற்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளன.
* ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்தியாவின் பெருமை வாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று.
* இவர் " நவீன இந்தியாவின் சிற்பி " எனவும் அழைக்கப்பட்டார்.
* நேரு மே 267,1964 ஆம் ஆண்டு இறந்தார்.