அயோத்திதாச பண்டிதர்
( Iyodhee Thass Pandithar Tamil Important Notes Free Download)
பிறப்பு: 1845 மே 20
(சென்னை ஆயிரம் விளக்கு)
இயற்பெயர்: காத்தவராயன்
தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி , சமத்துவம் பகுத்தறிவு ஆகிய கொள்கைகளை மக்களிடம் பரவலாக்கியவர்கள் தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் அவர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் அயோத்திதாசர் சமூக சேவகர், தென்னிந்திய சமூக சீர்திருத்தத்தின் தந்தை என அறியப்படுபவர் அயோத்திதாச பண்டிதர் .
பெரிய தாசர் சிறிது நீலகிரிக்கு சென்று அங்கு வாழ்ந்து திருமணத்திற்கு பிறகு பர்மாவுக்கு சென்றார் அங்கு கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்த தமிழர்களின் உரிமைகளுக்காக பாடுபட்டார். அதன் பின்னர் இவர் தமிழ்நாட்டுக்கு இரண்டு குழந்தைகளுடன் திரும்பிய அயோத்திதாசர்
தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்டோர் உரிமைகாகவும் அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் முக்கியமாக பாடுபட்டார்
நல்ல சிந்தனை, சிறப்பான செயல், உயர்வான பேச்சு, உவப்பான எழுத்து, உழைப்பு ஆகிய ஐந்து பண்புகளையும் ஒருசேரப் பெற்ற சிந்தனையாளர்கள் தான் அயோத்திதாசர்.
காத்தவராயன் ஆசிரியர்: அயோத்திதாச பண்டிதர்( என்பவரிடம் இவர் கல்வியும் சித்த மருத்துவமும் பயின்றார்) ஆசிரியர் பெயரை தன் பெயராக மாற்றிக் கொண்டார்.
அயோத்திதாசர் தெரிந்த மொழிகள்: தமிழ் ,பாலி ,வடமொழி ,ஆங்கிலம்.
இலக்கியம் இலக்கணம் கணிதம் மருத்துவம் சமத்துவம் உள்ளிட்ட பல்துறை நூல்களையும் ஆழ்ந்து கற்றார்.
இதழ்:
ஒரு பைசா தமிழன்(19-06-1907) இது ஒரு வார இதழ் சென்னை ராயப்பேட்டையில் காலணா விலையில் தொடங்கினார். ஒரு ஆண்டிற்கு பிறகு இதழின் பெயரை தமிழன்( 1908 ஆகஸ்டு 26 )என மாற்றினார்.
இவ்விதழின் நோக்கம்( உயர் நிலையையும் , கடை நிலையையும் , இடை நிலையையும் பாகுபடுத்தி அறிய முடியாத மக்களுக்கு நீதி, நேர்மை ,சரியான பாதை ஆகியவற்றை தெளிவு படுத்துவதே இவ்விதழின் நோக்கம்).
அயோத்திதாசரும் ஜான் திரவியமும் சேர்ந்து திராவிட கழகம் என்ற அமைப்பை ஆரம்பித்து
திராவிட பாண்டியன் இதழ்(1885). என்ற இதழ் மூலம் திராவிட கருத்துக்களை கூறினர்..
எனவே அயோத்திதாசர் திராவிட கருத்தியலின் முன்னோடி எனவும் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது
அயோத்திதாசர் பதிப்பித்த நூல்கள்:
1. போகர் 700
2. அகத்தியர் 200
3. சிமிட்டி ரத்தின சுருக்கம்
4. பால வாகடம்.
அயோத்தி தாசர் எழுதிய நூல்கள்:
1. புத்தரது ஆதி வேதம்
2. இந்திரர் தேச சரித்திரம்
3. விவாக விளக்கம்
4. புத்தர் சரித்திரம்.
5. திருக்குறள் வரலாறு
திருவள்ளுவர், அவ்வையார் ஆகியோரின் படைப்புகளுக்கு பௌத்தக் கோட்பாடுகள் அடிப்படையில் புதிய விளக்கங்களை எழுதியுள்ளார்.
1870ல் அத்வைனந்தா சபாவை தோற்றுவித்தார்
அயோத்திதாசர் தமது கொள்கைகளை வலியுறுத்தவும் ஒடுக்கப்பட்டோர் உரிமைகளை பாதுகாக்கவும் 1891 Or 1892 ஆம் ஆண்டு திராவிட மகாஜன சங்கம் என்னும் அமைப்பைத் தோற்றுவித்தார்.
சென்னையில் ஐந்து இடங்களில் பஞ்சமர் பள்ளிகளை நிறுவினார்.
தன்னுடைய 25 வயதில் நீலகிரியில் ஒடுக்கப்பட்ட மக்களான தோடர்களை அணிதிரட்டி 1875இல் அத்வைத ஆனந்த சபை என்னும் அமைப்பை நிறுவினார் .
பிரம்மஞான சபையை நிறுவிய ஹென்றி S. ஆல்காட்டை சந்தித்து பௌத்தத்திற்கு மாறுவதாக அறிவித்தார்
இந்திய பௌத்த சங்கம் 1898 ல் நிறுவினார்.
1886 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர்களை இந்துக்கள் என்று அழைக்காமல் சாதியற்ற தமிழர்கள் என அழைக்குமாறு கூறினார்.
அயோத்திதாசர் கூற்று:
மக்கள் அனைவரும் அன்பு கொண்டு வாழவேண்டும் கோபம் பொறாமை பொய் களவு போன்றவற்றை தன் வாழ்வில் இருந்து நீக்கி வாழ வேண்டும்.
அன்பு கொண்டு வாழும் நாட்டில் புலியும் பசுவும் ஒரே நீர் துறையில் நீர் அருந்தும் எனக் கூறினார்.
ஒரு நாட்டுக்கு வழிகாட்டும் தலைவர் மக்களுள் அறிவாற்றல் பெற்றவராக நன்னெறியை கடை பிடிப்பவராக இருக்க வேண்டும் அப்படிப்பட்ட தலைவரை வணங்குதற்கு உரியவராக மக்கள் ஏற்பார்கள் என கூறினார்.
மக்கள் அனைவரும் சம உரிமை பெற்று சமத்துவமாக வாழ வேண்டும் என விரும்பினார்.
விடுதலை என்பது வெறும் ஆட்சி மாற்றம் மட்டுமன்று அது மக்களின் வாழ்க்கையில் தங்களை ஏற்படுத்துவதாக அமைய வேண்டும்.
சுய ராஜ்யத்தின் நோக்கம் அதிகாரத்தை கைப்பற்றுவது மட்டும் இருக்கக்கூடாது மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும்.
தந்தை பெரியாரின் கூற்று:
என் பகுத்தறிவு பிரச்சாரத்திற்கும் சீர்திருத்த கருத்துகளுக்கும் முன்னோடிகளாக திகழ்ந்தவர்கள் பண்டிதமணி அயோத்திதாசர் மற்றும் தங்கவயல் அப்பாத்துரையார் ஆவார்கள்.
அயோத்திதாசர் கல்வியோடு சேர்ந்து கைத்தொழிலும் கற்க வேண்டும் என்று கூறினார்
** சென்னை தாம்பரத்தில் உள்ள சித்த ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து மருத்துவமனைக்கு அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இறப்பு: 1914 மே 5
மேலே உள்ள Notes PDF வடிவில் Download செய்வதற்கு 👇👇👇👇👇👇👇👇