Mahatma Gandhi ( INDIAN NATIONAL MOVEMENTS) History Tamil Important Notes Free Download

 மகாத்மா காந்தியின்  இந்திய தேசிய இயக்கத்தின் பங்கு

பாகம் 1

 (Mahatma Gandhi History Tamil Important Notes Free Download-Indian National Movement History Important Notes Tamil Free Download)

 பிறப்பு:

 மகாத்மா காந்தி 1869 இல் அக்டோபர் 2 அன்று குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பந்தரில்  ஒரு வசதி மிக்க குடும்பத்தில் பிறந்தார்.

 இவர் பெற்றோர் தந்தை காபா காந்தி தாய் புத்திலிபாய் ..

காந்தியின் தந்தை குஜராத் போர்பந்தரில் ஒரு அரச குடும்பத்தில் இடம் திவானாகப் பதவி வகித்தார். ராஜ்கோட்டில் கல்வி பயின்று கஸ்தூரிபாயை மணந்து கொண்டார்

 கல்வி: 


 காந்தி இளம் வயதில் படித்த நூல்  சிரவணன் பிதுர்த்தி மற்றும் அரிச்சந்திரன் நாடகம். 

19 வயதான காந்தி 1888 ல் பாரிஸ்டர் பட்டம் வாங்க இங்கிலாந்து சென்றார். 

பின்னர் 3 வருடங்கள் பயின்று 1891 ல் பாரிஸ்டர் பட்டம் பெற்ற பிறகு இந்தியா திரும்பினார். ஆனால் அவர் எதிர்பார்த்த வேலை கிடைக்க வில்லை. 

எனவே மீண்டும் 1893 ல் ஏப்ரல் மாதம் பணியில் சேர தென் ஆப்பிரிக்கா சென்றார். 


தென் ஆப்பிரிக்கா பயணம்:


1903ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா ஜோகனஸ்பர்க் நகரில் பிளேக் நோய் பரவியது.. அதனைக் கண்ட காந்தி "ஆரோக்கியத்துக்கான வழிகாட்டி" எனும் நூலை வெளியிட்டார்.  1893 ஜூன் 7ஆம் தேதி  காந்தி டர்பனில் இருந்து பிரிட்டோரியா வுக்கு ரயில் பயணம் மேற்கொண்டபோது பீட்டர்மரிட்ஸ் பார்க் என்ற ரயில் நிலையத்தில் முதல் வகுப்புப் பெட்டியில் இருந்து  கருப்பினத்தவர் என்ற காரணத்துக்காக கட்டாயமாக வெளியேற்ற பட்டார். 

 தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது காந்தி பல போராட்டங்களை கண்டு அங்கு வெற்றி கண்டார். 1914ல் காந்தியுடன் சேர்ந்து " தில்லையடி  வள்ளியம்மை" எனும் தமிழ் பெண்மணியும் போராட்டத்தில் கலந்து  கொண்டு உயிர் நீத்தார். எனவே காந்தி ஒரு போராட்டத்தை எதிர்கொள்வதற்கான அனைத்து வழிகளையும் கற்றுக் கொண்டு பின்னர் இந்தியா திரும்பினார். 


 காந்தியை கவர்ந்த நூல்கள்:


1.தால்சுதாய் இயற்றிய கடவுளின் அரசாங்கம்  உன்னில் உள்ளது


2. ஜான் ரஸ்கின் இன்  அண்டூ திஸ் லாஸ்ட்


3.  தாரோவின் சட்ட மறுப்பு


 மேலும் காந்தியடிகள் ஜான் ரஸ்கின் என்பவரால் கவரப்பட்டு  1905ல்  பீனிக்ஸ் குடியிருப்பையும்

1910 ல்  தால்சுதாய் பண்ணையையும் ஏற்படுத்தினார்


இந்தியா வருகை:


 1915 ஜனவரி 9 இந்தியா திரும்பினார். காந்தியின் வருகையான ஜனவரி மாதம் 9 ம் தேதியை " பாரதிய பிரவேசி" தினமாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகிறது.. 1915ல் கோபால கிருஷ்ண கோகலே வால் கவரப்பட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவரையே அரசியல் குரு வாக எண்ணினார்.  பின்னர்  குஜராத் அகமதாபாத்தில்  சபர்மதி ஆற்றங்கரையில் சத்தியாகிரக ஆசிரமம் நிறுவினார்  பின்னர் இது "சபர்மதி ஆசிரமம்" என அழைக்கப்பட்டது. 


 காந்தியின்  அகிம்சை போராட்டம்:


 காந்தியை முதன் முதலில் போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தவர்  பீகாரில் உள்ள சம்பரன் சத்யாகிரகத்தில் " ராஜ்குமார் சுக்லா (1917)" என்பவர் அழைப்பு விடுத்தார்.  அதன் பின்னர் நடைபெற்ற கேதா போராட்டம்(1918) மற்றும் அகமதாபாத் மில்(1918) போராட்டம் காந்திய ஒரு தேச தலைவராக உருவெடுத்தது. 


1919 மார்ச் மாதம் காந்தியடிகள் சென்னையில் உள்ள ராஜாஜி வீட்டிற்கு சென்றபோது பாரதியாரைச் சந்தித்தார்


 ரௌவுலட் சட்டம் :


 1919 மார்ச் 21ஆம் நாள் ரவுலட் சட்டத்தை ஆங்கில அரசு நிறைவேற்றியது . இந்த சட்டப்படி எந்தவித விசாரணையும் இல்லாமல் யாரையும் சிறையிலடைக்க  காவல்துறைக்கு  அதிகாரம்  வழங்கப்பட்டது.   காந்தியடிகள் இந்த சட்டத்தை முழுமையாக எதிர்க்க உறுதி கொண்டனர். இதன் மூலம் அன்னியத் துணிகளைப் புறக்கணித்தல்,  கள்ளு கடைகளுக்கு முன் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது  என்று  புதுப்புது முறைகளை அணுகினர்.  மேலும் காந்தியடிகள் "1919 ஏப்ரல் 6-ஆம் தேதி" ரவுலட் சட்டத்தை " கருப்பு சட்டம்" அறிவித்தார் .இதன் மூலம் நாடு முழுவதும் இந்த சட்டத்துக்கு எதிராக போராட அறிவித்தார். இந்தப் போராட்டம் பஞ்சாபிலுள்ள அமிர்தசரஸ் மற்றும் லாகூரில் மிகவும் தீவிரமடைந்துள்ளது ..இந்தப் போராட்டத்தின் விளைவாக  சைபுதீன் கிச்சுலு மற்றும் டாக்டர் சத்யபால்  என்ற 2 முக்கிய உள்ளூர் தலைவர்கள் ஏப்ரல் 9ஆம் தேதி அமிர்தசரசில் கைது செய்யப்பட்டனர்..  மேலும்  இந்த முக்கிய போராட்டமானது  பஞ்சாபில் உள்ள  அமிர்தசரஸ் எனும் பகுதியில் உள்ள ஜாலியன் வாலாபாக் என்ற மைதானத்தில்  ஏப்ரல் 13ம் தேதி  அனைவரும் போராடுவதற்காக ஒன்றுகூடினர். 

 இந்தப் போராட்டத்தை  அறிந்திருந்த   மைக்கேல் ஓ டயர்,  ஜெனரல் ரெஜினால்டு  டயரை கலகத்தை அடக்கும் படி உத்தரவிட்டார்..  போராட்டத்திற்கு விரைந்து சென்ற அவர் அனைவரையும்  சுடும் படி உத்தரவிட்டார்.  சுமார் பத்து மணித்துளிகள் நடந்த இந்தத் துப்பாக்கிச் சூட்டில்  ஆயிரக்கணக்கானோர் இறந்தனர்..  ஆனால் அரசு தகவல் படி 379 உயிரிழப்புகள் என்று கூறப்படுகிறது. இதனால் பெரிய அளவில்  பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது..  இந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையை நேரில் கண்டவர்கள்  உதம் சிங் என்பவரும் ஆவர்.


இதற்கு பழி தீர்க்கும் வகையில்  உதம் சிங் என்பவர் ஜெனரல் மைக்கேல் ஓ டயர் ஐ லண்டனில் 1940 மார்ச் 13 சுட்டுக் கொன்றார். இந்த வன்முறைக்கு பிறகு ரவீந்திரநாத் தாகூர் தனது அரச  பட்டத்தை உடனடியாக துறந்தார்.  காந்தி தனது கெய்கர் இ ஹிந்த் என்ற பதக்கத்தை திருப்பிக் கொடுத்தார்..  ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு விசாரணைக்குழு சரியான ஒரு காரணத்தை குறிப்பிடாத வகையில் காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்த உறுதி செய்தது.. 


 கிலாபத் இயக்கம்: 




 முதல் உலகப் போர் முடிவடைந்த நிலையில் துருக்கி பிரிட்டிஷ் படை இடம் சரண் அடைந்தது.  இதனால் துருக்கியின் உயர் பதவியில் இருந்த கலிஃபா என்பவரை கைது செய்தது.  அனைவரையும் விருப்பின்றி துனை நாடுகளான அனைத்து நாடுகளையும் பிரிட்டிஷ் தலைமையின் கீழ் கொண்டு வந்தது.  இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அனைத்து முஸ்லிம்களும் பிரிட்டிஷ் படைக்கு எதிராக போராட ஆரம்பித்தனர் அதன் விளைவாகவே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் எதிராக போராட்டத்தில் இறங்கினார்.  அதில் குறிப்பாக இந்தியாவில் 1917அக்டோபர் 17ல்  மௌலானா சவுகத் அலி மற்றும் சௌகத் அலி ஆகியோர் முன்னிலையில் கிலாபத் இயக்கம் டெல்லியில் நடைபெற  தொடங்கியது.  இதனை இந்து முஸ்லிம்களின் ஒற்றுமையாக எண்ணிய காந்தியடிகள் முஸ்லிம்களையும்  இணைத்து ஒத்துழையாமை இயக்கத்திற்கு ஆதரவாக்க விரும்பினார்..  இதன் மூலம் காந்தியடிகள் சவுகத் அலியின் அழைப்பை ஏற்று கிலாபத் இயக்கம் மாநாட்டிற்கு 1920  செப்டம்பரில் தலைமை தாங்கினார்.  அப்போது சௌகத் அலி "இந்து-முஸ்லிம் வாழ்க"  "வந்தே மாதரம்" என்ற முழக்கங்களை எழுப்பினார்..கிலாபத் இயக்கம் தமிழ்நாட்டில் 1920 ஏப்ரல் 17  சென்னையில்  முஸ்லிம் லீக் இயக்கத்தை தோற்றுவித்த யாகுப் ஹசன்  தலைமையிலும்,  ராஜாஜியின் உதவியுடனும் ஒத்துழையாமை இயக்கமும் சேர்ந்து  நடைபெற்றது.  முக்கிய குறிப்பாக கிலாபத் இயக்கத்தின் அதிகமாக எழுச்சியுற்ற இடம் வாணியம்பாடி.


மேலே உள்ள Notes PDF வடிவில் Download செய்வதற்கு 👇👇👇👇👇👇👇👇

                         DOWNLOAD

Post a Comment

Previous Post Next Post