Tnpsc Polity Model Questions free Online Test / (மத்திய அரசு) RRB, SSC, Tn police Question model questions

அரசு தேர்வு எழுதும் மாணவர்களுக்காக தயாரிக்க பட்டுள்ளது

 வினாக்களுக்கு விடையளித்துவிட்டு  கீழே தரப்பட்டுள்ள விடையை சரிபார்க்கவும். 



    மத்திய அரசு

 

1. குடியரசுத் தலைவர் அவருடைய சார்நிலை அலுவலர்கள் மூலமாக மத்திய அரசின் நிர்வாக அதிகாரங்களை எந்த விதியின் படி செயல்படுத்துகிறார்

a) 53         b) 53(1)       c) 54         d) 54(1) 


2. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கும்போது அந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவி எப்போது காலியானதாக அறிவிக்கப்படும்.

a) குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்பு

b) குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது 

c)குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணத்தின் போது 

d) குடியரசுத் தலைவர் பதவியேற்புக்கு 14 நாட்களுக்கு முன்.


3. குடியரசுத் தலைவர் பதவி காலம் முடிந்த பின்பு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட தகுதி உடையவர் ஆவார் என்னும் விதி

a) 55    b) 56  c)57  d) 58


4. குடியரசுத் தலைவரின் தேர்தல் வாக்காளர் குழுமத்தின் டெல்லி மற்றும் பாண்டிச்சேரி இணைந்து நடைமுறைக்கு வந்த ஆண்டு

a) 1993  b) 1992   c) 1994   d) 1995


5. குடியரசுத் தலைவர் தேர்தலில் எத்தனை பங்கு வாக்குகள் பெற இயலாத நிலையில் வைப்புத் தொகை திரும்ப செலுத்தப்பட மாட்டாது

a) 1/4  b) 1/6  c)1/8  d) 1/10


6. கூற்று 1 -குடியரசுத் தலைவர் ஆங்கிலோ இந்திய சமூகத்தைச் சேர்ந்த 2 நபர்களை மக்களவையில் நியமிக்கிறார்.

கூற்று 2 -ஆங்கிலோ இந்தியருக்கு இரண்டு இடங்கள் கட்டாயமாக ஒதுக்கப்பட வேண்டும்.

a) கூற்று 1 2சரி

b) கூற்று 1 2 தவறு 

c) கூற்று 1 தவறு 2 சரி

d) கூற்று 1 சரி 2 தவறு


7. குடியரசுத் தலைவர் மத்திய பாதுகாப்பு படையின் தலைமை தளபதி என்பது விதி

a) 53 (1) b)  53 (2)  c) 54 (1)  d) 54(2) 


8.முதல் இடைக்கால குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர்

a) ஜாகிர் உசேன் b) இதயத்துல்லா c) V V கிரி d) B D ஜாட்டி


9. கூற்று 1 -அரசியலமைப்பு சட்டம் துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கான தொடர் வழிமுறைகளை நமக்கு வழங்குகிறது

கூற்று 2 -புதிய துணை குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கும் வரை மாநிலங்களவையின் துணைத் தலைவர் அப்பதவியை வகிப்பார்

a) கூற்று 1 2சரி

b) கூற்று 1 2 தவறு 

c) கூற்று 1 தவறு 2 சரி

d) கூற்று 1 சரி 2 தவறு


10. கூற்று 1 -இந்தியாவின் பிரதம அமைச்சர் பதவியை எனது வெஸ்ட்மின்ஸ்டர் அரசியலமைப்பு ஜனநாயக முறையில் இருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது

 கூற்று 2 -வெஸ்ட்மின்ஸ்டர் என்ற பெயர் அது அமைந்துள்ள அரண்மனையை குறிக்கும்.

a) கூற்று 1 2சரி

b) கூற்று 1 2 தவறு 

c) கூற்று 1 தவறு 2 சரி

d) கூற்று 1 சரி 2 தவறு


11. கூற்று 1 -மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் 15% மட்டுமே அமைச்சரவை உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும் 

கூற்று 2 -கேபினட் அமைச்சர்கள் ஒரு முறை சாரா அமைப்பு

a) கூற்று 1 2சரி

b) கூற்று 1 2 தவறு 

c) கூற்று 1 தவறு 2 சரி

d) கூற்று 1 சரி 2 தவறு


12. நிதி மசோதாவின் தொடக்கம் முதல் முடிவு வரை

a) சபாநாயகர் -மக்களவை -மாநிலங்களவை- குடியரசுத் தலைவர்

b) மக்களவை -குடியரசுத் தலைவர்- மாநிலங்களவை

c) குடியரசுத் தலைவர் மக்களவை மாநிலங்களவை

d) அமைச்சரவை- குடியரசுத் தலைவர்- மக்களவை -மாநிலங்களவை.


13. நாட்டின் முக்கிய செய்தி தொடர்பாளராக செயல்படுபவர்

a) பிரதமர் b)சபாநாயகர் c) குடியரசுத் தலைவர் d)உள்துறை அமைச்சர்


14. நாட்டின் மிக இளம் வயது பிரதமர் பதவி வகித்தவர்

a) இந்திரா காந்தி b)ராஜீவ் காந்தி 

c) சரண்சிங்  d) வி பி சிங்


15. நாடாளுமன்றத்தின் பருவகால கூட்டத்தொடர் 

a) பிப்ரவரி -மே  b) ஜூலை- செப்டம்பர்

c) நவம்பர்- டிசம்பர் d) அக்டோபர்- டிசம்பர்

 

16. குடியரசுத்தலைவர் தேர்தல் பிரச்சினைகள் தொடர்பாக விவரிப்பது எந்த விதி_________


17. சுதந்திரத்திற்கு பின் இந்தியாவின் உச்ச நீதிமன்றம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது_______& தினம்__________& தொடங்கியபோது இருந்த நீதிபதிகளின் எண்ணிக்கை__________


18. இந்தியாவின் நிதியில் நிலையற்ற தன்மையும் வருவாயும் அச்சுறுத்தல் உள்ளதாக குடியரசுத் தலைவருக்கு தோன்றினால் பிறப்பிக்கப்படும் சட்டத்தின் விதி______________


19. கூற்று 1 -ஒரு அமைச்சர் தாமாக பதவி விலகி விட்டால் அந்த அமைச்சரின் பதவி காலி இடம் ஆகிறது 

கூற்று 2 -ஒரு பிரதமர் பதவி விலகினார் அல்லது இறந்து விட்டால் அவரது அரசாங்கம் இல்லாமல் போய் விடுகிறது.

a) கூற்று 1 2சரி

b) கூற்று 1 2 தவறு 

c) கூற்று 1 தவறு 2 சரி

d) கூற்று 1 சரி 2 தவறு


20. பிரதமரின் அலுவலகம் ஆனது பிரதமரின் செயலகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு_________


21. நிழல் அமைச்சரவை எந்த நாட்டின் நாடாளுமன்றத்தின் செயல்பாட்டில் உள்ளது

a) இந்தியா   b)ஆஸ்திரேலியா c) அமெரிக்கா    d) இங்கிலாந்து


22. குடியரசுத் தலைவரால் இயற்றப்பட்ட அவசரச் சட்டத்தின் மீது பாராளுமன்றம் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாத போது அச்சட்டம் காலாவதியாகும் காலம்

a) 6 வாரம்   b)2 மாதம்   c) 4 வாரம்  d)4 மாதம்


23. கூற்று 1 -நாடாளுமன்ற அவைகளில் உறுப்பினராக இல்லாத ஒருவர் பிரதமராக தேர்ந்தெடுக்க படலாம் 

கூற்று 2- தேர்ந்தெடுக்கப்பட்ட பின் ஆறு மாத காலத்திற்குள் ஏதேனும் ஓர் அவையில் உறுப்பினர் ஆகுதல் வேண்டும்.

a) கூற்று 1 2சரி

b) கூற்று 1 2 தவறு 

c) கூற்று 1 தவறு 2 சரி

d) கூற்று 1 சரி 2 தவறு


24. நாடாளுமன்றம் இந்த நாட்டின் சின்னமாக விளங்குவதால் நாட்டின் சுதந்திரம் மற்றும் விடுதலையின் சின்னமாக திகழ்பவர்._________என்று நேரு குறிப்பிடுபவர் யார்

a) பிரதமர்  b) குடியரசுத் தலைவர்  c) சபாநாயகர்   d) மாநிலங்களவைத் தலைவர்


25. பாராளுமன்ற தலைமைச் செயலகம் விதி

a) 94  b) 98  c) 99  d) 100


26. மொத்த அமைச்சரவை ஆனது பிரதமரையும் சேர்த்து மக்களவையின் மொத்த அளவில் 15 சதவீதம் தாண்டக் கூடாது என்று கூறும் திருத்த சட்டம்_____________


27. துணை குடியரசுத் தலைவரின் பதவிநீக்கம் தீர்மானம்

a) இரண்டு அவைகளிலும் சிறப்பு பெரும்பான்மை 

b) இரண்டு அவைகளிலும் தனிப்பெரும்பான்மை 

c) மாநிலங்களவையில் சிறப்பு பெரும்பான்மை மக்கள் அவையில் தனிப்பெரும்பான்மை 

d) மக்களவையில் சிறப்பு பெரும்பான்மை மாநிலங்களவையில் தனிப்பெரும்பான்மை


28. உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பை அதிகப்படுத்துதல்- இதில் பெற்றுள்ள அவைகளின் அதிகாரம்

a) மாநிலங்களவையின் சிறப்பு அதிகாரம். b) மக்களவையின் சிறப்பு அதிகாரம். c) மாநிலங்களவை மக்களவை சமநிலையில் உள்ள அதிகாரம் . 

d) மாநிலங்களவை உடனான சமமற்ற அதிகாரம்.


29. கூற்று 1 ஆஸ்திரேலிய மேலவை செனட் என்றும் 

கூற்று 2 இங்கிலாந்து மேலவையை பிரபுக்கள் சபை என்றும் அழைப்பர்

a) கூற்று 1 2சரி

b) கூற்று 1 2 தவறு 

c) கூற்று 1 சரி 2 தவறு

d) கூற்று 1 தவறு 2 சரி


30. ஒரு நிதி மசோதாவை மாநிலங்களவையில் எத்தனை காலத்திற்கு தாமதப்படுத்தலாம்_________


31. கூற்று 1 -ஒரு தனிநபர் முன்வரைவை அறிமுகப்படுத்தும் முன் ஒரு மாத காலத்திற்கு முன் சபாநாயகரிடம் தெரிவிக்க வேண்டும்

 கூற்று 2- இந்த முன் வரை என் முதல் வாசிப்பில் நடைபெற்ற பின்பு இரண்டு நாள் இடைவெளிக்குப் பிறகு இரண்டாவது வாசிப்பு நடைபெறும்

a) கூற்று 1 2 தவறு

b) கூற்று 1 2 சரி

c) கூற்று 1 தவறு 2 சரி

d) கூற்று 1 சரி 2 தவறு


32. கீழ் காண்பவனவற்றுள் மாநிலப் பட்டியலில் அல்லாதது

a) சிறைச்சாலை b)வர்த்தகம் மற்றும் வணிகம் d) பொது சுகாதாரம்

d) தொழிற்சங்கங்கள்


33. மக்களவையில் ஒரு சாதாரண சட்ட முன்வரைவு அமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்டு தோல்வி அடைந்தால் அரசாங்கம் பதவி விலக வேண்டும்--- சரியா / தவறா


34. அமைச்சர்கள்  எந்த அவைக்கு/ யாருக்கு கூட்டு பொறுப்புடையவர்கள்

a) மக்களவை b)மாநிலங்களவை  c)இரு அவைகளுக்கும்  d) பிரதமருக்கு


35. கூற்று 1- இந்திய தலைமை வழக்கறிஞர் பதவி காலம் மற்றும் பதவி நீக்கம் அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை கூற்று 2 -அரசாங்கம் பதவி விலகும் போது இவரும் ராஜினாமா செய்வார்

a) கூற்று 1 சரி 2 தவறு

b) கூற்று 1 2 தவறு 

c) கூற்று 1 தவறு 2 சரி

d) கூற்று 1 2 சரி


36. பொது பணத்தின் பாதுகாவலன் என்று அழைக்கப்படுபவர்/ குழு

a) பொது கணக்கு குழு 

b) தலைமை கணக்கு தணிக்கையாளர்

c) மதிப்பீடு குழு  d) நிதி அமைச்சர்


37.CAG தனது அறிக்கையினை யாரிடம் சமர்ப்பிக்க வேண்டும்

a) சபாநாயகர் b)பிரதமர் c)பொது கணக்கு குழு d) மதிப்பீட்டு குழு.


38. உச்சநீதிமன்றம் ஆவண நீதிமன்றமாக செயல்படுகிறது என்று கூறும் விதி_______


39. உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகளை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுடன் எத்தனை ஆண்டுகளுக்கு மிகாமல் நியமிக்கலாம்______& அதற்கான விதி_______

_

40. மக்களவையில் விவாதம் நடத்த கால அவகாசம் இல்லாத நிலையில் விவாத முடிவுற்ற பகுதியோடு இணைத்து வாக்கெடுப்புக்கு விடுவது

a) சாதாரண வெட்டு தீர்மானம்   b)தனித்தனி வெட்டுத் தீர்மானம்    c) கங்காரு வெட்டு தீர்மானம்     d) கில்லட்டின் தீர்மானம்


41. மக்களவை மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்கள் சட்ட ரீதியான அங்கீகாரத்தை பெற்ற ஆண்டு

a) 1966   b)1976   c) 1976   d) 1977


42. இ- நீதிமன்றங்கள் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது

a) 2005    b) 2006   c)2007  d) 2008


43. நீதிபதிகளின் நடத்தை குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு அரசியலமைப்பு தடைக்கான விதி_______


44. எந்த அரசியலமைப்பு திருத்த சட்டத்தின்படி உயர் நீதிமன்றங்களின் மறுசீராய்வு அதிகாரம் குறைக்கப்பட்டது________


45. எந்த அரசியலமைப்பு திருத்த சட்டத்தின் படி உயர் நீதிமன்றங்களின் மறுசீராய்வு அதிகாரம் மீண்டும் பழைய நிலையை அடைந்தது_________


45. உயர் நீதிமன்றங்களில் இருந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான சான்றிதழ் பற்றிய விதி________

a) 134   b) 134 A     c) 135   d)135 A


46. கீழே கொடுக்கப்பட்டுள்ளயில் மாநில நெருக்கடி பற்றியது

a) 352  b)360   c) 365   d) இவை எவையும் இல்லை


47. வழக்குகள் அதிகமாக தேக்கம் அடைந்த மாநிலம் __________ஒரு வழக்கும் நிலுவையில் இல்லாத மாநிலம்_________


48. கட்சித்தாவல் தடை சட்டத்தின்படி உறுப்பினர் தகுதி இழப்பை தீர்மானிப்பவர் சபாநாயகர் என்று கூறும் விதி_________


49. இந்திய அரசியலமைப்பின் படி நாட்டின் பிரதமர் ஆவதற்கான குறைந்தபட்ச வயது _____


50. கூற்று 1 நிதி சட்ட முன்வரைவு என்பது மக்களவையில் அறிமுகப்படுத்தப்படும் கூற்று 2 சில தருணங்களில் காலதாமதத்தை தவிர்க்க இரு அவையும் கூட்டி இதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படும்

a) கூற்று 1 2சரி

b) கூற்று 1 2 தவறு 

c) கூற்று 1 தவறு 2 சரி

d) கூற்று 1 சரி 2 தவறு.



Post a Comment

Previous Post Next Post