அரசுக்கு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்( DPSP) | Tnpsc Polity (Constitution) Study material

  அரசுக்கு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்( DPSP)


                              பகுதி - 4


சரத்து 36:


நெறிமுறைக் கோட்பாடுகளை பின்பற்றக்கூடிய அரசினை பற்றி கூறுகின்றது. இங்கு அரசு என்பது மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்புகளை குறிக்கின்றது. இவ்வமைப்புகள் சட்டம் இயற்றும் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறை கோட்பாடுகளை இச்சரத்து விளக்குகின்றது.


சரத்து 37: 


அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைக் கோட்பாடுகளை செயல்படுத்த அரசாங்கத்தை நீதித்துறை கட்டுப்படுத்த இயலாது.


சட்டம் இயற்றும் போது இக்கோட்பாடுகளை பின்பற்றுவது அரசின் கடமையாகும். நெறிமுறைக் கோட்பாடுகளை அரசு சட்டம் இயற்றும் போது நினைவில் கொண்டால் மக்கள் நல அரசு அமையும் என்பதை இச்சரத்து விளக்குகின்றது.


சரத்து -38


பொது நல அரசில் மக்களுக்கு சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நீதி வழங்கப்படுவதை உறுதி செய்தலும் மற்றும் மக்களுக்கு இடையேயுள்ள வருமானம், தகுதி, வசதி வாய்ப்புகளில்


உள்ள வேறுபாடுகளை நீக்குதல். இச்சரத்தில் மக்களின் நல வாழ்வினை மேம்படுத்துவதற்காக பாதுகாத்தலை பற்றி விளக்குகிறது.


அரசு சமூக ஒழுங்கினை

தனிநபர்களுக்கிடையே மட்டுமல்லாது வேறுபட்ட இடங்களில் வசிக்கும் குழுக்களுக்கிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை அகற்ற அரசு முயல வேண்டும்.

மக்களுக்கு இனையேயுள்ள வருமானம், தகுதி, வசதி மற்றும் வாய்ப்புகளில் உள்ள வேறுபாடுகளை குறைத்தலும் ஆகும். 


ஷரத்து 39:


• குடிமகனின் வாழ்விற்கு தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்தி


செய்தலும் (Adequate means of livelihood) வள ஆதராங்களை சமமான முறையில் பிரித்தளித்தலும், . • ஒரே இடத்தில் வளங்கள் குவிக்கப்படுதலை தடுத்தலும்


ஆண், பெண் என வேறுபாடின்றி செய்த வேலைக்கு சம ஊதியம் வழங்கலும்.


தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி வேலைக்கு அமர்த்தப்படுவதைத்


தடுத்தலும்.


குழந்தைகளை நலமான, வளமான முறையில் வளர்ப்பதற்கான வாய்ப்புகளை அளிப்பதும் இவைகள் குறித்து பாதுகாப்பு வழங்குதலும்.


ஷரத்து 39A :


அனைவருக்கும் சமநீதி வழங்குவதும் தேவைப்படின்

நீதிமன்றத்தில் வாதாடுவதற்கு (அ) முறையிடுவதற்கான இலவச சட்ட உதவியை (free legal aid) ஏழைகளுக்கு வழங்குவதும்.

1976ல் 42வது  சட்ட திருத்தத்தின்படி இந்த சரத்து இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது. 


ஷரத்து 39 E :


 குழந்தைகள் சுதந்திரமாகவும் உடல் ஆரோக்யத்துடன் வாழ வழிசெய்கிறது


ஷரத்து 39  F :


 குழந்தைகளின்  ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வழி செய்கிறது. 


> ஷரத்து 41: 


வேலைசெய்வதற்கான உரிமை பெறுவதும், கல்விபெறும் உரிமையும்ம (Right to education) மற்றும் வேலையில்லாதோர் நிலையில், அரசு உதவித்தொகைகளை பெற உறுதி செய்தலும் ஆகும்.


> ஷரத்து 42: 


மனிதாபிமான அடிப்படையிலான பணி சூழலும் மற்றும் மகப்வேறு தேவையான உதவிகளும் (maternity relief)


ஷரத்து 43 : 


தொழிலாளர்களுக்கான வாழ்வதாராரம் கூலி, முறையபான தரமான வாழ்க்கைக்குத் தேவையான வசதிகளை செய்து தருதலும்.


ஷரத்து 43 A: 


தொழிற்சாலைகள் நிர்வாகத்தில் தொழிலாளர்களை பங்க கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.


> ஷரத்து 47 : 


ஊட்டசத்து மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தலும் மற்றும் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதும் ஆகும்.


காந்தியக் கோட்பாடுகள் :- (Gandhian Principles);


ஷரத்து 40 : 


கிராம பஞ்சாயத்துகளை முறைப்படுத்தவும், சட்டப்படி அதிகாரம் வழங்கவும் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளான பொறுப்புகளை வழங்குவது ஆகும்.


ஷரத்து 43 :


கிராமப்புறங்களில் சுயதொழில், குடிசைத்தொழில் மற்றும் கூட்டுறவு முறையில் தொழிற்முயற்சிகளை ஊக்கு விக்க வழிசெய்கிறது.


ஷரத்து 43 B:


 கூட்டுறவு சங்கங்கள் தாமாகவே முன்வந்து தொழிற்சார்ந்த மேலாண்ரமையை ஏற்படுதுதல், சுயேட்சையாக செயல்படுதல், அதற்கென சில உரிமைகள், சுதந்திரம அளித்தலை பற்றி இது கூறுகிறது.


> ஷரத்து 46 : 


சமூகத்தின், ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் நலிந்த பிரிவினருக்கு பொருளாதரத்தில் மேம்பட உதவுவதும், சமுதாயத்தில் அவர்களுக்கு எதிராக நடைபெறும் செயல்களை தண்டித்து நீதி வழங்கலும், அவர்களை பாதுகாத்தலும்.


ஷரத்து 47 : 


ஊடல் நலத்திற்கு தீங்குதரும் மது மற்றும் புகைப்பழக்கத்துக்கு தடைவிதித்தல்.


ஷரத்து 48 :


கால்நடை விலங்குகளை பலியிடுதலை தடுத்தலும், கால்நடை வளர்ப்பு பற்றி விழிப்புணர்வு உண்டாகுதல் பற்றியும் கூறுகிறது.


ஷரத்து 48 A :


 சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு எடுக்கும் வனம் மற்றும் வன விலங்கு பாதுகாப்பு அளிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.. 

 இந்த சரத்து 42வது சட்ட சட்டத்தின்படி 1976ல்  சேர்க்கப்பட்டது. 

1986  -சுற்றுச்சூழல் சட்டம் இயற்றப்பட்டது


ஷரத்து 49: 


 * தேசிய சின்னங்களை பாதுகாத்தல்

 *  கலாச்சார இடங்கள் மற்றும் பண்டங்களை பாதுகாத்தல்

 *  கலை முக்கியத்துவம் இந்த பொருட்களை பாதுகாத்தல்

 *  தொல்லியல் தொடர்பான பழங்கால ஆதார சான்றுப் பொருட்களை பாதுகாத்தல்


ஷரத்து 50 :


 நிதித் துறையில் இருந்து நிர்வாகத்துறை பிரிப்பதற்கு அரசியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். 


ஷரத்து 51 :


 * அரசு சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை  ஊக்குவிக்க வேண்டும்

*  நாடுகளுக்கிடையே நட்புறவு

*   சர்வதேச சட்டம் மற்றும் ஒப்பந்தம் கடமைகள்




Post a Comment

Previous Post Next Post