இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சி[ சுதந்திரத்திற்கு பின்]
1. 1947 ஜூலை 16ல் பாகிஸ்தான் அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டது.
2. இந்திய அரசியலமைப்பு சபையின் முதல் கூட்டம் 1946 டிசம்பர் 9ல் டாக்டர் சச்சிதானந்த சிங்காவை இடைக்கால தலைவராகக் கொண்டு நடைபெற்றது.
3. 1946 டிசம்பர் 11ல் டாக்டர் ராஜேந்திர பிரசாத், அரசியலமைப்பு சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
4. இந்திய அரசியலமைப்பை உருவாக்க 13 குழுக்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் முக்கியமானவை:
1. மத்திய அதிகாரக் குழு தலைவர் J.L.நேரு.
2. அடிப்படை உரிமைகள் சிறுபான்மையினர் குழு தலைவர் V.B.பட்டேல்.
3. மாகாண அரசியலமைப்புக் குழு தலைவர் V.B.பட்டேல்.
4. மத்திய அரசியலமைப்புக் குழு தலைவர் J.L.நேரு.
5. வரைவுக் குழு தலைவர் B.R.அம்பேத்கர்.
6. கொடி குழு தலைவர் J.B.கிருபளானி.
7.வகைப்படுத்தல் குழு தலைவர் K.M.முன்ஷி
இவற்றுள் முக்கியமானது வரைவுக்குழு. இந்த வரைவுக்குழு (Drafting Committee)7 பேர் கொண்டது.
1.B.R.அம்பேத்கர் தலைவர்
2.N.கோபாலசாமி அய்யங்கார்
3. அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர்
4.K.M.முன்ஷி
5. முகமது சதவுல்லா
6. N.மாதவ ராவ்
7. T.கிருஷ்ணமாச்சாரி
• இந்திய அரசியலமைப்புக்கான கருத்தினை முதன் முதலில் (Idea) தெரிவித்தவர் M.N.ராய்.
• இந்திய அரசியலமைப்புக்குழு ஆலோசகர் ( Advisor) B.M.ராவ்.
• இந்திய அரசியலமைப்பு 1949 நவம்பர் 26ல் அரசியல் நிர்ணய சபையால் ஏற்கப்பட்டது (Adopted).
• 1950 ஜனவரி 26ல் நடைமுறைக்கு வந்தது (Came into Force).
• இந்திய அரசியலமைப்பை உருவாக்க ஆன காலம் 2 வருடங்கள், 11 மாதங்கள், 18 நாட்கள்.
• ஜூலை 22, 1947ல் தேசியக் கொடி அரசியலமைப்பு சபையால் ஏற்கப்பட்டது.
• ஆந்திராவை சேர்ந்த பிங்காலி வெங்கையாவினால் இது வடிவமைக்கப்பட்ட
து.
• இந்திய அரசியலமைப்பு ஆரம்பத்தில் (Article) 395 ஷரத்துக்கள் (Schedule) 8 பட்டியல் (தற்போது 12), Part 22 பகுதிகள் கொண்டிருந்தது.
இந்திய அரசியலமைப்பின் சிறப்பம்சங்கள்:
1. இந்திய அரசியலமைப்பு உலகிலேயே நீளமான மற்றும் பெரிய எழுதப்பட்ட அரசியலமைப்பு.
2. பகுதி நெகிழும் நெகிழா தன்மை (Partly Flexible and Partly Rigid) கொண்டது?
3. இதில் சில பிரிவுகளை 2,3,4 போன்றவற்றை சாதாரணமாக திருத்தி விடலாம்.
4. சில பிரிவுகளை 52,63 போன்றவற்றை பிரிவு 368ன் சிறப்பு திருத்தத்தின் படி கையாள வேண்டும். எனவே, இது பகுதி நெகிழும் நெகிழா தன்மையுடையது.
5. இது அரைகுறை கூட்டாட்சி (Quazi Federal) எனப்படுகிறது.
• அரைக் கூட்டாட்சி என்பது கூட்டாட்சி முறை சாராமல் ஒற்றையாட்சி முறையையும் சாராமல் (Unitory) இரண்டும் கலந்த முறையில் உள்ளது.
6. நாடாளுமன்ற முறை (Parliamentary Type)
7. இரு அவைகள் (Bicameralism) லோக் சபா, ராஜ்ய சபா கொண்டது.
8. நீதித்துறை மேலாண்மை (Superemacy of Constitution) இந்திய அரசியலமைப்பின் பாதுகாவலன் உச்ச நீதிமன்றம்
9. வயது வந்தோர் வாக்குரிமை
18 வயது வந்தோர் ஓட்டுப் போட 61வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் வழி வகுத்தது.
10. அடிப்படை உரிமைகள் (Fundamental Rigihts)
• இது பகுதி IIIல் அமைந்துள்ளது.
11. வழிகாட்டு நெறிமுறைகள் (Directive Principles of State Policy)
12. ஒற்றைக் குடியுரிமை (Single Citizenship)
13. அடிப்படைக் கடமைகள் (Fundamental Duties)
• இது பகுதி IV ‘A’ ல் Art 51 ‘A’ 42வது சட்டத் திருத்தம் 1976ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது.
• தற்போது 11 அடிப்படைக் கடமைகள்
• இது ரஷ்ய அரசியலமைப்பிலிருந்து கொண்டு வரப்பட்டது.
14. சிறப்பான முகப்புரை (The Preamble)
• இது இந்திய அரசியலமைப்பின் சாவி எனப்படுகிறது.
• இந்தியாவை, இறைமையுடைய சம தர்ம சமயச் சார்பற்ற மக்களாட்சி குடியரசு எனக் குறிப்பிடுகிறது.
• SSSDR SOVERIGN SOCIALIST SECULAR DEMACRATIC REPUBLIC என இந்தியாவை குறிப்பிடுகிறது.
• முகப்புரை ஒரே ஒரு முறை திருத்தப்பட்டுள்ளது.
• 1976ம் ஆண்டு 42வது சட்டத் திருத்தத்தின் மூலம் சமதர்ம (Socialist) சமயச் சார்பற்ற (Secular) ஒற்றுமை & ஒருமைப்பாடு Unity & Integrity ஆகிய சொற்கள் சேர்க்கப்பட்டன.
• முகப்புரை கருத்து (Idea) அமெரிக்க அரசியமைப்பிலிருந்து பெறப்பட்டது. முகப்புரை மொழி (Language of the Preamble)
இந்திய அரசியலமைப்புச்சட்டத்தில் முக்கிய அம்சங்கள் பெறப்பட்ட நாடுகள்:
1. அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) அமெரிக்கா.
2. முகப்புரை (Preamble) அமெரிக்கா.
3.நீதிபதிகள் பதவி நீக்கம் (Removal of judges of SC – HC) அமெரிக்கா. 4.தனித்தியங்கும் நீதித்துறை () அமெரிக்கா.
5.நீதிப்புனராய்வு (Judicial Review) அமெரிக்கா.
6. அடிப்படைக் கடமைகள் (Fundamental Duties) ரஷ்யா.
7.ஐந்தாண்டுத் திட்டம் (Five Year Plan) ரஷ்யா.
8.வழிகாட்டு நெறிமுறைகள் (DPSP) அயர்லாந்து.
9. ராஜ்யசபை உறுப்பினர் நியமனம் (Nomination of Rajyasabha Member) அயர்லாந்து.
10. குடியரசுத் தலைவர் தேர்தல் முறை (Method of election of the president) அயர்லாந்து.
11.பாராளுமன்ற முறை (Parlimentary Type) இங்கிலாந்து.
12. சட்டத்தின் ஆட்சி.