இந்திய அரசியலமைப்பு
1.அரசின் கூறுகள் மொத்தம் 4, அவை.
நிலப்பரப்பு, மக்கள் தொகை, அரசாங்கம், இறைமை.
2.அரசியலமைப்பு சட்டம் என்பது ஒரு நாட்டின் அரசியல் நடைமுறைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட அடிப்படையான சட்டம்.
3.உலகில் முதன்முதலில் அரிஸ்டாட்டில், 158 கிரேக்க அரசியல் முறைகளை ஆராய்ந்து ஏதென்ஸின் அரசியலமைப்பை (Constitution of Athens) ஏற்படுத்தினர்.
இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சி[சுதந்த
ிரத்திற்கு முன்]
1. 1773 ஒழுங்குமுரை சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது இந்தியாவில் கம்பெனி நிர்வாகத்தின் மீது ஆங்கிலேய நாடாளுமன்றம் தனது கட்டுப்பாட்டைக் கொண்டு வருவதற்கான முதல் முயற்சியாக இருந்தது.
2. 1784 பிட் இந்திய சட்டம்.
3. 1793, 1813, 1833, 1853 சாசனச் சட்டங்கள்
• 1793 முதல் சாசனச் சட்டம்.
• 1813 இந்தியர்களின் கல்விக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் ஒதுக்கியது.
• 1833 சாசன சட்டம் நிறைவேற்றம்.
• சிவில் சர்வீஸ் போட்டித் தேர்வு அறிமுகம்.
• வங்காள கவர்னர் ஜெனரல் இந்திய கவர்னர் ஜெனரல் ஆனார்.
• இதன்படி இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் பெண்டிங் பிரபு.
• 1853 இறுதியான சாசனச் சட்டம்.
4.1858 சிப்பாய்க் கலகத்தின் (1857) விளைவாக ஆட்சி கம்பெனியிடமிருந்து ஆங்கில அரசிற்கு மாறியது.
5. 1861ம் ஆண்டு கவுன்சில் சட்டம்.
• இந்திய மக்களின் பிரதிநிதிகளை சேர்த்துக் கொள்ள கவர்னர் ஜெனரலுக்கு வழிவகுத்தது.
6. 1872ம் ஆண்டு கவுன்சில் சட்டம்.
7. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் சட்டமன்ற கவுன்சிலுக்குள் நுழைந்தனர்.
8. சட்டமியற்றும் பணிகளுடன் பட்ஜெட் பற்றிய விவாதங்களை (நிபந்தனைகளுக்குட்பட்டு) நடத்த அனுமதிக்கப்பட்டனர்.
9.1909 மிண்டோ-மார்லி சீர்திருத்தம்.
• வகுப்பு வாரி பிரதிநித்துவம் புகுத்தப்பட்டது.
• முஸ்லிம்களுக்கு தனித்தொகுதி வழங்கப்பட்டது.
10. 1919 மாண்டேகு செம்ஸ் போர்டு சீர்திருத்தம்.
• இரட்டை ஆட்சி முறையைப் புகுத்தியது.
11. 1935 இந்திய அரசாங்கச் சட்டம்.
• அனைத்திந்திய கூட்டாட்சி (All India Federation)உருவாக வழிவகை செய்தது.
• பர்மாவை இந்தியாவிலிருந்து பிரித்தது.
• மாகாண சுயாட்சி வழங்கப்பட்டது.
12. 1946 கேபினட் மிஷன்(Cabinet Mission Plan) திட்டம்.
• தற்போதைய இந்திய அரசியலமைப்பு சட்டம் 1946 மே 16ல் கேபினட் மிஷன் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு நிர்ணய சபையால் உருவாக்கப்பட்டது.
13. 1947 இந்திய விடுதலைச்சட்டம்.
• இந்தியாவை இரு நாடுகளாகப் பிரித்து இந்தியா, பாகிஸ்தான் என்ற இரண்டு டொமினியன்கள் தோற்றுவிக்கப்பட்டன.
இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சி[ சுதந்திரத்திற்கு பின்]
1. 1947 ஜூலை 16ல் பாகிஸ்தான் அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டது.
2. இந்திய அரசியலமைப்பு சபையின் முதல் கூட்டம் 1946 டிசம்பர் 9ல் டாக்டர் சச்சிதானந்த சிங்காவை இடைக்கால தலைவராகக் கொண்டு நடைபெற்றது.
3. 1946 டிசம்பர் 11ல் டாக்டர் ராஜேந்திர பிரசாத், அரசியலமைப்பு சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
4. இந்திய அரசியலமைப்பை உருவாக்க 13 குழுக்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் முக்கியமானவை:
i. மத்திய அதிகாரக் குழு தலைவர் J.L.நேரு.
ii. அடிப்படை உரிமைகள் சிறுபான்மையினர் குழு தலைவர் V.B.பட்டேல்.
iii. மாகாண அரசியலமைப்புக் குழு தலைவர் V.B.பட்டேல்.
iv. மத்திய அரசியலமைப்புக் குழு தலைவர் J.Lநேரு.
v. வரைவுக் குழு தலைவர் B.R.அம்பேத்கர்.
vi. கொடி குழு தலைவர் J.B.கிருபளானி.
vii.வகைப்படுத்தல் குழு தலைவர் K.M.முன்ஷி
இவற்றுள் முக்கியமானது வரைவுக்குழு. இந்த வரைவுக்குழு (Drafting Committee)7 பேர் கொண்டது.