அரசமைப்பின் அட்டவனைகள்: Schedules – 12

 அரசமைப்பின் அட்டவனைகள்: Schedules – 12

1. இந்தியாவின் 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்கள்.

2. குடியரசுத்தலைவர், துணைக் குடியரசித் தலைவர், ஆளுநர், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் இதர நீதிபதிகள், சம்பளம்.

3. பதவிப் பிரமாணம் மற்றும் உறுதி மொழிகள்.

4. இந்திய மாநிலங்களின் ராஜ்ய சபா உறுப்பினர்கள் எண்ணிக்கை பற்றியது.

5. அட்டவனைப்படுத்தப்பட்ட பழங்குடியினர் பகுதிகள் பற்றியது.

6. அஸ்ஸாம், மேகலாயா, திரிபுரா, மிசோரம் (ம) அருணாச்சல பிரதேச மாநில பழங்குடியினர் நலம் பற்றியது.

7. மத்தியப் பட்டியல் – 97, மாநிலப் பட்டியல் – 66, பொதுப்பட்டியல் 47 பற்றியது.

8. 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் பற்றியது.

9. நில சீர்திருத்தச்சட்டங்கள் பற்றியது (முதல் சட்டத் திருத்தம் 1951 ல் சேர்க்கப்பட்டது)

10. கட்சித் தாவல் தடைச்சட்டம் (52வது சட்ட திருத்தம் 1985)

11. பஞ்சாயத்து ராஜ் 73 வது சட்டத் திருத்தம் 1992.

12. நகராட்சி 74 வது சட்டத் திருத்தம் 1992.


இந்தியாவும் அதன் ஆட்சிப் பகுதிகளும் (THE UNION & ITS TERRITORIES)

• இது பகுதி 1 ல் அமைந்துள்ளது.

• Article 1 முதல் 4 வரை இந்திய ஒன்றியம் மற்றும் அதன் ஆட்சிப்பகுதிகளைக் குறிப்பிடுகிறது.

• தற்போது 28 மாநிலங்கள் 7 யூனியன் பிரதேசங்கள் (டெல்லி, தேசிய தலைநகரப் பகுதி உட்பட) உள்ளன.

மொழி வாரி மாநிலங்கள் தொடர்பான கமிட்டிகள் :

1. 1948 ஜூன் ல் தார் கமிட்டி அமைக்கப்பட்டு 1948 டிசம்பர் அறிக்கை சமர்ப்பிக்கபட்டது.

2. 1948 டிசம்பர் கமிட்டி அமைக்கப்பட்டு 1949 ஏப்ரல் அறிக்கை சமர்ப்பிக்கபட்டது.

3. 1953 டிசம்பர் பசல் அலி கமிட்டி அமைக்கப்பட்டு 1955 செப்டம்பர் அறிக்கை சமர்ப்பிக்கபட்டது.

1950ல் பகுதி A யில் உள்ள மாநிலங்கள், B யில் உள்ள மாநிலங்கள் C யில் உள்ள மாநிலங்கள் D யில் உள்ள மாநிலங்கள் என வகைப்படுத்தப்பட்டு இருந்தன.

1956ல் 7வது சட்டத் திருத்தத்தின்பட

மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. 1956ல் 14 மாநிலங்கள், 6 யூனியன் பிரதேசங்கள் என வகைப்படுத்தப்பட்டன.

மாநிலங்கள் உருவான ஆண்டு:

ஆந்திரா 1953 குஜராத் 1960 மகாராஷ்டிரா 1960

கேரளா 1956 மைசூர் 1956 நாகலாந்து 1963

அரியானா 1966 இமாச்சலப் பிரதேசம் 1971 மேகலாயா 1971

மணிப்பூர் 1971 திரிபுரா 1971 சிக்கிம் 1975

மிசோரம் 1987 அருணாச்சலப் பிரதேசம் 1987 கோவா 1987

சட்டீஸ்கர் 2000 உத்தரகாண்ட் 2000 ஜார்கண்ட் 2000 • மைசூர் மாநிலம் 1973ல் கர்நாடகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. • மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு பெயர் மாற்றச்சட்டம் 1968 படி பெயர் மாற்றம் செய்யப்பட்டது. • ஜனவரி 14, 1969ல் தமிழ்நாடு பெயர் மாற்றம் நடைமுறைக்கு வந்தது.

குறைந்த பட்ச வயது.

குடியரசுத் தலைவர் 35 துணைக் குடியரசுத் தலைவர் 35

ஆளுநர் 35 பிரதமர் 25 லோக்சபா உறுப்பினர் 25

ராஜ்யசபா உறுப்பினர் 30 சட்டமன்ற உறுப்பினர் (எம். எல்.ஏ) 25

முதலமைச்சர் 25 சட்ட மேலவை உறுப்பினர் (எம்.எல்.சி) 30

பஞ்சாயத்து உறுப்பினர் 21 வாக்காளர் 18

திருமண வயதுப் பெண் 18 திருமண வயது ஆண் 21

கட்டாய அடிப்படைக் கல்வி 6 – 14 வரை

குழந்தை தொழிலாளர் என்போர் 14 வயதுக்குட்பட்ட குழந்தை தொழிலாளர்கள்

அரசுப் பணியாளராக குறைந்தப்பட்ச வயது 18

குறிப்பிட்ட பணிகளுக்கு வெவ்வேறு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உதாரணம்: VAO- 21, EO- 25, SR- 20

குடியுரிமை (Citizenship)

• இது பகுதி 2ல் அமைந்துள்ளது.

• இந்தியாவில் ஒற்றைக் குடியுரிமை நடைமுறையில் உள்ளது.

• Art 5 முதல் 11 வரை இந்தியக் குடியுரிமை பற்றி குறிப்பிடுகிறது.

அடிப்படை உரிமைகள்? (Fundamental Rights)

• இது பகுதி 3ல் அமைந்துள்ளது.

• Art 12 முதல் 35 வரை அடிப்படை உரிமைகள் பற்றி குறிப்பிடுகிறது.

• இது நடைமுறைக்கு வரும் போது 7 அடிப்படை உரிமைகள் இருந்தன.

• 44வது சட்டத் திருத்தத்தின் மூலம் சொத்துரிமை 1978 ஆம் ஆண்டு அடிப்படை உரிமைகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

• தற்போது உள்ள அடிப்படை உரிமைகள் 6 அவை

• சமத்துவ உரிமை Art 14- 18

• சுதந்திர உரிமை Art 19- 22

• சுரண்டலுக்கு எதிரான உரிமை Art 23- 24

• சமய உரிமை Art 25- 28

• அரசியலமைப்புக்கு உட்பட்டு பரிகாரம் தேடும் Art 32

1. சமத்துவ உரிமை

Art. 14 சட்டத்தின் முன் அனைவரும் சமம்

Art. 15 சாதி, சமய, இன, பால் (அ) பிறப்பு வேற்பாடு காட்ட தடை

Art. 16 அரசு வேலை வாய்ப்புகளில் சமவாய்ப்பு

Art. 16 (4) SC, ST -க்கு முன்னுரிமை

Art. 17 தீண்டாமை ஒழிப்பு

Art. 18 பட்டங்கள் ஒழிப்பு

2. சுதந்திர உரிமை (Art. 19- 22)

Art.19 இது 6 சுதந்திரங்களை வழங்கியுள்ளது.

1.பேச்சு (Freedom of Speech and expression)

2. ஒன்று கூடும் சுதந்திரம் (Freedom of Assembly)

3. சங்கம் அமைக்க (Freedom to form Association)

4. இந்தியா எங்கும் செல்ல (Freedom of Movement)

5. இந்தியா எங்கும் வசிக்க (Freedom of Residence & Settlement)

6. தொழில் செய்ய (Freedom of Profession, Occupation, Trade, Business)

Art. 20 – சட்ட விரோதமாக குற்றம் சமத்துவதிலிருந்து பாதுகாப்பு

Art.21 – தனி நபர் சுதந்திரம்

Art.21A – 6 முதல் 14 வயது வரை கட்டாயக் கல்வி

Art. 22கைது செய்து காவலில் வைப்பதில் பாதுகாப்பு

3. சுரண்டலுக்கு எதிரான உரிமை (Art. 23 – 24)

Art.23 – சுரண்டலுக்கு எதிராகவும் கொத்தடிமை முறையை தடை செய்கிறது.

Art.24 – 14 வயதுக்குட்பட்ட சிறார்களை பணியில் அமர்த்த தடை

4. சமய உரிமை (Art.25-28)

Art.25 – விரும்பிய மதத்தை தழுவ உரிமை

Art.26 – மத விஷயங்களை நிர்வகிக்க உரிமை

Art.27 – மத அடிப்படையிலான வரிகளை தடுத்தல்

Art.28 – குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களில் குறிப்பிட்ட மதத்தைச்சார்ந்தவர்கள் கூட உரிமை

5. கல்வி, கலாச்சார உரிமை (Art.29 -30)

Art.29 – சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாத்தல்

Art.30 – சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் நடத்த உரிமை

Art.31 – நீக்கப்பட்டது.

6. அரசியலமைப்புக்கு உட்பட்டு பரிகாரம் தேடும் உரிமை (Art 32) இது இந்திய அரசியலமைப்பின் இதயமும் ஆன்மாவும் போன்றது. டாக்டர் அம்பேத்கர்

இது 5 நீதிப் பேரானைகளை வழங்குகிறது.

1. Writ of Habeas Corpus -ஆட்கொணர் நீதிப் பேராணை

2. Writ of Mandamus – கட்டளை நீதிப் பேராணை

3. Writ of Prohibition – தடை நீதிப் பேராணை

4. Writ of Quowarranto – உரிமையேது வினா நீதிப்பேராணை

5. Writ of Certiorari – ஆவணக் கேட்பு நீதிப் பேராணை

Post a Comment

Previous Post Next Post