TNPSC EXAM : பொது அறிவு
- உயிரியல் - இரத்தக் குழாய்கள்
பிளாஸ்மா என்பது இரத்தச் செல்கள் இல்லாத திரவமாகும். இது இரத்தத்தில் 55% காணப்படுகிறது. பிளாஸ்மா காரத்தன்மை கொண்ட வெளிர் மஞ்சள் நிற திரவமாகும். மேலும் இரத்தக் குழாய்கள் பற்றிய முக்கிய தகவல்களை வினா விடைகளாக தெரிந்து கொள்வோம்.
1. உடல் உறுப்பிலிருந்து இரத்தத்தை இதயத்திற்கு கொண்டு வருவது எது? - சிரைகள்.
2. நுரையீரல் தமனி மட்டும் .................... அற்ற இரத்தத்தை எடுத்துச் செல்கிறது. - உயிர்வளி.
3. இதயத்திலிருந்து இரத்தத்தை உடல் உறுப்புகளுக்குக் கொண்டு செல்வது எது? - தமனிகள்.
4. எந்த இரத்தக் குழாய்களில் வால்வுகள் காணப்படுவதில்லை. - தமனிகள்.
5. உடல் உறுப்பிலிருந்து இரத்தத்தை இதயத்திற்குக் கொண்டு வருவது எது? - சிரைகள்.
6. உடல் தசைகளின் மேல்பகுதியில் காணப்படும் இரத்தக் குழாய்கள் எவை? - சிரைகள்.
7. செல்களுக்கு இடையே பரவிக் காணப்படும் மிக நுண்ணிய குழாய்கள் .................... - தந்துகிகள்.
8. ஒவ்வொரு சிறுநீரகத்திலும் ஏறக்குறைய எத்தனை நெஃப்ரான்கள் காணப்படுகின்றன. - ஒரு மில்லியன்.
9. மனித உடலில் எவ்வளவு இரத்தம் உள்ளது. - சராசரியாக 4 முதல் 5 லிட்டர்.
10. பிளாஸ்மா என்பது என்ன? - இரத்த செல்கள் இல்லாத திரவம்.
11. இரத்தத்தில் பிளாஸ்மா எத்தனை சதவீதம் காணப்படுகிறது? - 55மூ.
12. பிளாஸ்மா என்பது .................. - காரத்தன்மை கொண்ட வெளிர் மஞ்சள் நிற திரவம்.
13. இதயத்தால் வெளியேற்றப்படும் இரத்தத்தில் ஐந்தில் ஒரு பகுதி, ஒவ்வொரு நிமிடமும் ..................... அடைகிறது. - சிறுநீரகத்தை.
14. நுரையீரல் சிரை மட்டும் .................... நிறைந்த இரத்தத்தை எடுத்துச் செல்கிறது. - உயிர்வளி.
15. எந்த இரத்தக் குழாய்களில் வால்வுகள் காணப்படுகிறது? - சிரைகள்