1. (1) இந்தியா நேரடி மக்களாட்சி முறையில் பாராளுமன்ற மக்களாட்சி முறையை பின்பற்றுகிறது
(2) இந்திய அரசியல் சட்டத்தின் அறிமுகமும் முடிவுரையும் முகவுரை ஆகும்
(3) 1960இல் நடைபெற்ற பெருபாரி வழக்கில்,முகவுரை அரசியல் அமைப்பின் ஒரு பகுதி அல்ல என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது
a) 1,2சரி- 3 தவறு b)1,3 சரி- 2தவறு
c) அனைத்தும் சரி d) 1,2 தவறு - 3 சரி
2. நமது நீண்ட நாள் கனவை முகவுரை பிரதிபலிக்கிறது என்று கூறியவர்?
a) அல்லாடி கிருஷ்ணசாமி
b) K. M. முன்ஷி
c) நேரு
d) பால்கிவாலா
3. குறிக்கோள் தீர்மானம் கொண்டு வர முன்மொழிந்தவர்?
a) இராஜேந்திர பிரசாத்
b) நேரு
c) மகாத்மா காந்தி
d) ஜே. பி. கிருபாளினி
4. (1) இந்திய அரசியலமைப்பானது நீளமானது எனினும் அவ்வகை அரசியலமைப்பு சட்டத்தில் பெரும்பான்மை இங்கிலாந்து அரசியலமைப்பையே பின்பற்றுகிறது.
(2) இந்தியாவிற்குள் வர்த்தகம் வணிகம் மற்றும் பரிமாற்றம் பற்றி பகுதி 13 கூறுகிறது.
c) இந்தியாவில் ஜனாதிபதியை நியமித்தல் அயர்லாந்து அரசமைப்பில் இருந்து எடுக்கப்பட்டது
a) 1,சரி-2,3 தவறு b)1,3 சரி- 2தவறு
c) அனைத்தும் சரி d) 1, தவறு - 2,3 சரி
5. அடிப்படை கடமைகள் பின்வரும் எந்த சட்டத்தின் மூலம் சேர்க்கப்பட்டது?
a) 42 வது சட்ட திருத்தம் 1978
b) 42 வது சட்ட திருத்தம் 1976
c) 44 வது சட்ட திருத்தம் 1978
d) 46வது சட்ட திருத்தம் 1976
6. இந்திய அரசியலமைப்பை வரைவுக் குழு அளித்த நாள்?
a) பிப்ரவரி 21,1948
b) நவம்பர் 26,1949
c) பிப்ரவரி 21, 1949
d) நவம்பர் 26 , 1947
7. (1) இந்திய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கு அரசியல் நிர்ணயசபை அமைக்க முதலில் கோரிக்கை வைத்தவர் -ஜவஹர்லால் நேரு.
(2) இந்திய அரசியலமைப்பில் முதல் திருத்தம் செய்யப்பட்ட ஆண்டு - 1950
a) 1,2 சரி . b) 1,2 தவறு
c) 1 சரி, 2 தவறு d) 1 தவறு, 2 சரி
8. பழங்குடியினர் பகுதி மற்றும் பழங்குடியினர் தொடர்பான நிர்வாகம் பற்றி கூறும் அட்டவணை?
a) 3 . b) 4 . c) 5 d) 6
9. இந்திய அரசியலமைப்பில் 92வது திருத்தம் 2003 ல் எட்டாவது அட்டவணையில் சேர்க்க பட்ட மொழிகள்?
(1) போடோ
(2) டோக்ரி
(3) மைதிலி
(4) சந்தாலி
a) 1,2 மற்றும் 3
b) 1,3 மற்றும் 4
c) 2,3 மற்றும் 4
d) அனைத்தும்
10. இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ள பட்ட ஆண்டு?
a) 1947 b) 1948
c) 1950 d) 1949
11. பொருத்துக:-
(1) .பெருபாரி யூனியன் வழக்கு- 1. 1967
(2). கேசவநந்தி பாரதி வழக்கு - 2. 1980
(3). மினர்வா மில்ஸ் வழக்கு - 3. 1973
(4) . கோலக்நாத் வழக்கு - 4. 1960
a) 4 3 2 1
b) 2 4 3 1
c) 4 3 1 2
d) 3 4 1 2
12.இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளபட்டது?
a) 26 Nov 1949 b) 26 july 1949
c) 26 may 1949 d) 26 june 1949
13. மாநிலங்களில் இரட்டை ஆட்சி முறையை அறிமுகப்படுத்திய சட்டம் எது?
a) இந்திய கவுன் சில் சட்டம் 1892
b) இந்திய கவுன் சில் சட்டம் 1861
c) இந்திய கவுன் சில் சட்டம் 1909
d) இந்திய அரசுச்சட்டம் 1919
14.
பின்வருவனவற்றுள் எது 26 ஜனவரி 1950 அன்று படி இந்திய அரசியலமைப்பு
முகவுரையில் சரியானது?
a) இறைமை, சமயசார்பின்மை, குடியரசு
b) இறைமை, சமதர்மம், சமயசார்பின்மை
c) இறைமை, சமயசார்பின்லம , சமதர்மம், மக்களாட்சி, குடியரசு
d) இறைமை, மக்களாட்சி, குடியரசு
15.அரசியலமைப்புச்சட்டதின் பிரிவு 356-ஐ பயன்படுத்துவது தொடர்பாக
உச்ச நீதிமன்றம் வழங்கிய மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு கீழ்க்காணும்
எந்த வழக்கில் வழங்கப்பட்டது?
a) இந்திரா சஹானி வழக்கு
b) எஸ் . ஆர். பொம்மை வழக்கு
c) மினர்வா மில் வழக்கு
d) கேசவானந்த பாரதி வழக்கு
16. கீழ்க்கண்டவற்றில் 21 வது அரசியலமைப்புச் சட்டதிருத்தம், 1967-ன் மூலமாக
எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட மொழி எது?
a) போடோ
b) நேபாளி
c) கொங்கனி
d) சிந்தி
17.நிதிபுனராய்வின் முக்கியதுவம் நடைமுறைப்படுத்திய நாடு?
a) இங்கிலாந்து
b) அமெரிக்கா
c) ஜெர்மனி
d) ரஷ்யா
18.“இந்திய அரசியலமைப்பு, முதல் மற்றும் முதன்மையாக, ஒரு சமூக
ஆவணமாகும்” எனக்கூறியவர் யார்?
a) கிரன்வில் ஆஸ்டின்
b) பைலி
c) மோதிலால் நேரு
d) மேற்கூறிய எதுவுமில்லை
19. முகவுரையில் சமதர்ம, மதசார்பற்ற மற்றும் ஒற்றுமை என்ற வார்த்தைகள்
சேர்க்கப்பட்டது?
a) 41வது அரசியலமைப்பு திருத்த சட்டம்
b) 42வது அரசியலமைப்பு திருத்த சட்டம்
c) 43வது அரசியலமைப்பு திருத்த சட்டம்
d) 44வது அரசியலமைப்பு திருத்த சட்டம
20 . கீழ்கண்டவற்றை பொருத்துக
(a) அரசியல் ஜாதகம் - 1. சர் ஐவர் ஜென்னிங்
(b) அரசியலமைப்பின் சாவி - 2. தர்கஸ்தாஸ் பர்கர்
(c) அரசியலமைப்பின் ஆன்மா - 3. பி. ஆர். அம்பேத்கர்
(d) வழக்குகளின் சொர்க்கம் - 4. எர்னஸ்ட் பார்க்கர்
(a) (b) (c) (d)
(A) 1 2 3 4
(B) 2 1 4 5
(C) 4 5 2 1
(D) 1 4 3 2
21. இந்திய அரசியலமைப்பின் பதினோராவது பகுதி எதை பற்றி
விவரிக்கிறது?
a) மத்திய-மாநில உறவுகள்
b) மத்திய அரசாங்கம்
c) மாநில அரசாங்கம்
d) தீர்ப்பாயம்
22. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஷரத்து 370 எதனைப் பற்றி
குறிப்பிடுகிறது?
a) தேர்தல்
b) அவசர நிலை பிரகடனம்
c) ஜம்மு காஷ்மீரில் தன்னாட்சி
d) மேற்கூறிய எதுவுமில்லை
23. இந்திய அரசியலமைப்பு இயற்றப் படுவதற்கு எத்தனை ஆண்டுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன?
a) 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 17 நாட்கள்
b) 2 ஆண்டுகள், 9 மாதங்கள், 15 நாட்கள்
c) 2 ஆண்டுகள், 8 மாதங்கள். 10 நாட்கள்
d) 2 ஆண்டுகள், 7 மாதங்கள், 8 நாட்கள்
24. மாகாண அரசியலமைப்புக் குழு தலைவர் யார்?
a) V.B.பட்டேல்
b) நேரு
c) இராஜேந்திர பிரசாத்
d) அம்பேத்கர்
25. 1946 டிசம்பர் 11ல் அரசியலமைப்பு நிர்ணய சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்?
a) இராஜேந்திர பிரசாத்
b) நேரு
c) அம்பேத்கர்
d) காந்தி