6th Economics full questions (Tnpsc and Railway Economics questions )

 

Hai Friends Tnpsc and railway Exams question given this Page 

Attend below question and give you effort

Make success.....


      "Check this questions answer  last line "


          "  Tnpsc Economics Questions "


1. அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய மக்கள் அங்காடியிலிருந்து வாங்கி பயன்படுத்தும் பொருட்கள்_________

அ) நுகர்வோர்  பொருட்கள்

ஆ) நுகர்வு பொருட்கள்

இ) வணிக பொருட்கள்

ஈ) ஏற்றுமதி பொருட்கள்


2. நுகர்வோர் பொருட்களுக்கு எடுத்துக்காட்டு_____

அ) அரிசி

ஆ) கோதுமை

இ) மிதிவண்டி

ஈ) அ மற்றும் இ


3. ____என்பது கையில் கிடைக்கும் வருமானத்தில் நுகர்வுக்கு செலவு செய்ததுபோக எதிர் கால தேவைக்காக ஒதுக்கப்படும் ஒரு தொகையாகும்.

அ) வருமானம்

ஆ) செலவு

இ) சேமிப்பு

ஈ) வரவு


4. ஒரு பண்டத்திற்கு பதிலாக மற்றொரு பண்டத்தை மாற்றிக் கொள்வது____

அ) ஏற்றுமதி

ஆ) இறக்குமதி

இ) பொருளை மாற்றும் முறை

ஈ) பண்ட மாற்று முறை


5. உணவுத் தேவைக்கும் தொழில் உற்பத்திக்கும் தேவையான மூலப்பொருள்களை உற்பத்தி செய்வது_____

அ) முதல் நிலைத் தொழில்

ஆ) இரண்டாம் நிலை தொழில்

இ) மூன்றாம் நிலை தொழில்

ஈ) நான்காம் நிலை தொழில்


6. முதல் நிலை தொழிலுக்கு எடுத்துக்காட்டு____

அ) வேளாண்மை

ஆ) கனிமம்

இ) தேன்

ஈ) அனைத்தும்


7. நாட்டின் பொருளாதார ஆணிவேர்____

அ) மீன் பிடித்தல்

ஆ) விவசாயம்

இ) தேன் எடுத்தல்

ஈ) பண்ட மாற்று முறை


8. மூலப்பொருள் அடிப்படையில் தொழில்கள் எத்தனை வகைப்படும்?

அ) 4

ஆ)5

இ) 2

ஈ) 3


9. கனிம தொழிற்சாலைக்கு எடுத்துக்காட்டு_____

அ) சிமெண்ட்

ஆ) அலுமினியம்

இ) பருத்தி

ஈ) அ மற்றும் ஆ


10. நமது நாட்டின் முதுகெலும்பு_____

அ) விவசாயம்

ஆ) விவசாயிகள்

இ) கிராமம்

ஈ) நகரம்


11. உற்பத்தி தொழிலிலும் சேவை தொழிலிலும் சிறந்து விளங்கும் மாநிலம்____

அ) கர்நாடகா

ஆ) கேரளா 

இ) தமிழ்நாடு

ஈ) ஆந்திரா



12. தேன் சேகரித்தல்_____ தொழில்.

அ) முதல் நிலை

ஆ) 2ம் நிலை

3) 3ம் நிலை

ஈ) 4ம் நிலை


13. தமிழ்நாட்டில்____ சதவீத மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர்.

அ) 47

ஆ) 45

இ) 35

ஈ) 25


14. சர்க்கரை ஆலை____நிலை தொழில்

அ) 2ம் நிலை

ஆ) 4ம் நிலை

இ) முதல் நிலை

ஈ) 3ம் நிலை


15. தொலைபேசி_____ நிலை தொழிலுக்கு எடுத்துக்காட்டு

அ) 3ம் நிலை

ஆ) 2ம் நிலை

இ) 1ம் நிலை

ஈ) 4ம் நிலை



Answers:1. A

2. C

3. C

4. D

5. A

6. D

7. B

8. A

9. D

10. A

11. C

12. A

13. A

14. A

15. A


Post a Comment

Previous Post Next Post