கலைஞர் கனவு இல்லம் திட்டம்:
அறிவிப்பு : பட்ஜெட் 2024
நோக்கம் :
2030 க்குள் குடிசை இல்லா தமிழ்நாடு என்ற நிலையை அடைதல்.
அம்சங்கள்:
1. 2030-க்குள் ஊரகப்பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் பயனாளிகளுக்கு வழங்குதல்.
2. வீட்டின் மதிப்பு :3.50 லட்சம்
3. வீட்டுமனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை உடன் வீடு கட்ட தொகை வழங்கப்படும்.
4. கிராம சபையின் மூலம் வெளிப்படையான முறையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.
5. தங்களின் கனவு இல்லத்தை பயனாளிகளை உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பு தரப்படும்.
6. நிதி ஒதுக்கீடு:
3500 கோடி ( 2024-2025 ) பட்ஜெட்
7. நிதி ஆண்டு 2024- 25 ஆம் ஆண்டில் 1 லட்சம் வீடுகள் கட்டப்படும்.