குடியரசு தலைவர் பற்றிய விதிகள்
(President Of India Articles)
விதி 52- குடியரசு தலைவர் பதவி:
இந்தியாவிற்கு குடியரசு தலைவர் ஒருவர் இருக்க வேண்டும் என்று கூறுகிறது..
விதி 53- நிர்வாக அதிகாரம்:
அனைத்து நிர்வாக அதிகாரங்களும் குடியரசு தலைவர் பெயரிலேயே நடக்க வேண்டும் என்று கூறுகிறது..
(குடியரசு தலைவர் பெயரளவு தலைவர் ஆவார்)
விதி 53(2) - குடியரசு தலைவர் முப்படைகளின் தலைமை தளபதியாக செயல் படுவார்..
விதி 54- தேர்தல்:
குடியரசு தலைவர் தேர்தல் நடத்துவது இந்திய தேர்தல் ஆணையம்..
நாடாளுமன்ற இரு அவைகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் அடங்கிய வாக்காளர் குழாம் மூலம் (electoral college) ஒற்றை மாற்று விகிதாசாரப் பிரதிநிதித்துவம் அடிப்படையில் தேர்ந்தெடுக்கின்றார்.
70 வது சட்டத் திருத்தம் 1992 படி டெல்லி மற்றும் புதுச்சேரி குடியரசு தலைவர் தேர்தலில் பங்கு பெறலாம் என அறிவிக்கப்பட்டது.. (1995 ல் நடைமுறை)
விதி 55- தேர்தல் நடத்தப்படும் முறை
குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் முறைகள்.
MLA வாக்கு எண்ணிக்கை அதிகமாக உள்ள மாநிலம் - உத்திரப்பிரதேசம்
MLA வாக்கு எண்ணிக்கை குறைவாக உள்ள மாநிலம் - சிக்கிம்
ஒரு MB ன் ஒட்டு மதிப்பு -708
84வது 2001 சட்ட திருத்தம் படி மேலும் 25 வருடங்கள் 1971 ன் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பயன்படுத்த அனுமதிக்க பட்டது..
விதி 56- பதவிகாலம்:
குடியரசு தலைவர் பதவி காலம் 5 ஆண்டுகள்.
பதவி காலம் முடிந்தும் புதிய குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பதவியில் இருப்பார். இவர் பதவி விலகல் கடிதத்தை துணை குடியரசு தலைவரிடம் கொடுப்பார்.. துணை குடியரசு தலைவர் அக்கடிதத்தை மக்களவையில் சமர்ப்பிக்க வேண்டும்.
விதி 57- மறு நியமனம்:
குடியரசு தலைவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கப்படலாம் என கூறப்படுகிறது
விதி 58- தகுதிகள்
குடியரசு தலைவர் தகுதிகள் பற்றி குறிப்பிடுகிறது
* இந்திய குடிமகன்
* குறைந்தபட்ச வயது 35
* மக்களவைத் உறுப்பினர்களுக்கான தகுதிகள்
* நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் உறுப்பினராக இருக்க கூடாது
* ஊதியம் பெறும் பதவியில் இருக்க கூடாது.
விதி 59 - சிறப்பு வரையறை
குடியரசு தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லம் ராஷ்டிரபதி பவன் இலவசம்
**குடியரசு தலைவர் தனது செயல்பாடுகள் குறித்து எந்த நீதிமன்றத்திடமும் பதில் சொல்ல தேவை இல்லை (361 ன் படி)
*எந்த ஒரு நெருக்கடி நிலையிலும் இவரின் சம்பளம் பிடிக்க பட மாட்டாது.
சம்பளம் -5, 00,000
குடியரசு தலைவர் இல்லம்:
டெல்லி- ராஷ்டிரபதி பவன்
சிம்லா- ரிட்ரீட் கட்டடம்
ஹைதராபாத்- ராஷ்டிரபதி நிலையம்
விதி 60- பதவியேற்பு உறுதி மொழி:
குடியரசு தலைவருக்கு பதவிபிரமானம் செய்து வைப்பவர் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
விதி 61- பதவி நீக்கம்:
குடியரசு தலைவரை பதவி நீக்கம் செய்வது தான் முக்கியமான கடுமையான முறையாகும்
குடியரசு தலைவரை பதவி நீக்கம் செய்ய முதலில் 4ல் 1 பங்கு இசைவு தெரிவித்து அதனை 14 நாட்கள் முன் குடியரசு தலைவரிடமும் மற்றும் மற்றொரு அவைக்கும் அனுப்ப வேண்டும்
பின்னர் இரு அவைகளிலும் 3ல் 2பங்கு இசைவு தெரிவிக்க வேண்டும்.. அப்படி நிரூபிக்க பட்டால் அப்போது இருந்தே குடியரசு தலைவர் பதவி நீக்கம் செய்ய படுவார்.
விதி 62- குடியரசு தலைவர் பதவி விலகல்;
குடியரசு தலைவர் பதவி விலகல் கடிதத்தை துணை குடியரசு தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும்..அவர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்..பதவி காலியாகும் போது தேர்தல் நடத்தப்பட வேண்டிய கால அவகாசம் 6 மாதம்...
குடியரசு தலைவர் பதவி காலியாக இருந்தால் துணை குடியரசு தலைவர் அப்பதவியில் வகிப்பார். அப்போது அவரின் சம்பளம் அனைத்தும் குடியரசு தலைவருக்கு உள்ளது போல இருக்கும்.
விதி 72- மன்னிக்கும் அதிகாரம்
( மரண தண்டனை உட்பட)
விதி 77- குடியரசு தலைவர் பெயரிலேயே அணைத்து அலுவலக பணிகளும் நடக்கும்.
விதி 86- குடியரசு தலைவர் உரை
விதி 87- குடியரசு தலைவர் சிறப்பு உரை (ஆண்டின் முதல் உரை)
நாடாளுமன்றம் ஆண்டின் முதல் முறை கூடும் போது குடியரசு தலைவர் தொடங்கி வைப்பார்.. இதுவே சிறப்புரை..
விதி 111 - குடியரசு தலைவர் அனைத்து மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தால் மட்டுமே சட்டமாக வெளிவரும்.
விதி 123- அவசர சட்டம் இயற்றும் அதிகாரம்
குடியசுத் தலைவர் அவசர சட்டம் இயற்றினால் 6 வாரத்திற்குள் நாடாளுமன்றம் கூடிய பிறகு ஒப்புதல் வாங்க வேண்டும்.. ஒப்புதல் வாங்கவில்லை எனில் அவசர சட்டம் ரத்து ஆகிவிடும்..
விதி 143- குடியரசு தலைவர் உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதியிடம் ஆலோசனை கேட்டல்
விதி 267- இந்திய அரசின் எதிர்பாராத செலவினங்களின் தொகுப்பு நிதி குடியரசு தலைவரிடம் உள்ளது என்று கூறுகிறது
Tags:
Constitution