Bharathiyar Tamil Important Notes (Barathiyar Important Tamil Notes Free Download)

 பாரதியார்

 (Barathiyar Important Tamil Notes Free Download)


( இப்பகுதி அரசு தேர்வு எழுதுபவர்களுக்காக தயாரிக்க பட்டுள்ளது) (முக்கியமானவை மட்டும்) 


 பாரதி மண்உரிமைக்காகவும் பெண்கள் உரிமைக்காகவும் குரல் கொடுத்தவர்களில் முதன்மையானவர் ஆவார். 

 இருபதாம் நூற்றாண்டில் சிறந்த கவிஞர்களில் பாரதியும் ஒருவர். 


பிறப்பு

 11.12.1882 திருநெல்வேலி மாவட்டம் எட்டயபுரம் ஊரில் பிறந்தார். 

பாரதியார் 11 வயதிலேயே எட்டயபுரம் அரண்மனையில் கவிதை பாடியதால் எட்டயபுரம் மன்னர் " பாரதி " என பட்டம் பெற்றார்.. இவருடன் சேர்ந்து சோமசுந்தரம் பாரதியாரும் பாரதி  என பட்டம் பெற்றார். 


பத்திரிகை பணி:

  

        பாரதி - 1904ல் முதல் முறையாக சுதேசமித்திரன் பத்திரிகையில் துணை ஆசிரியராக சேர்ந்தார்.( தமிழில் முதன் முதலில் வெளிவந்த தமிழ் பத்திரிகை- நாளிதழ்) 


 1905- சக்கரவர்த்தினி மாத இதழை தொடங்கி ஆசிரியராக பணியாற்றினார்( பெண்களுக்காக) 


1907- இந்தியா என்ற இதழை தொடங்கி ஆசிரியராக பணியாற்றினார்.. புரட்சிகர தேசியவாதத்தில்  முக்கிய பத்திரிகையாக திகழ்ந்தது.. வாரம் தோறும் "சிகப்பு" நிறத்தில் வெளிவந்தது. "முதன் முறையாக கருத்துப்படம் இந்தியா இதழில் வெளிவந்தது.. 


1908- பாலபாரதம் என்ற" ஆங்கில" இதழை தொடங்கி ஆசிரியராக பணியாற்றினார்

 

1909-விஜயா மற்றும் கர்மயோகி என்ற இரு பத்திரிகை தொடங்கி ஆசிரியராக பணியாற்றினார்


1910- சூரியோதயம் என்ற பத்திரிகையை புதுச்சேரியில் தொடங்கி ஆசிரியராக பணியாற்றினார்.. 


நூல்கள்:

பாரதி 

  1. கண்ணன் பாட்டு,

  2. குயில் பாட்டு, 

  3. பாப்பா பாட்டு, 

  4. பாஞ்சாலி சபதம்

  5. புதிய ஆத்திசூடி

முதலிய நூல்களையும் 


1907 ல் திலகர் நூலை "Tenets of the party" என்ற பெயரிலும், சூரத் மாநாட்டில் நடந்தவை பற்றியும் நூலில் மொழி பெயர்ப்பு செய்தார். 

 

புதுச்சேரி செல்தல்:


நீலகண்ட பிரம்மச்சாரி தொடங்கிய (1904) பாரத மாதா சங்கத்தின் உறுப்பினராக இருந்த வாஞ்சிநாதன் மணியாச்சி இரயில் நிலையத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆஷ் துரையை  சுட்டு கொன்றார்... மேலும் தானே சுட்டு கொண்டு இறந்தார்.. 

இதற்கு காரணம் பாரதியின் புரட்சி மிக்க கருத்து தான் காரணம் என எண்ணி ஆங்கிலேயர் பாரதியை கைது செய்ய உத்தரவிட்டனர்... இதனால் பாரதி புதுச்சேரிக்கு தஞ்சம் புகுந்தார்.. 

இதன் பிறகு இந்தியா மற்றும் விஜயா பத்திரிகையும் உடன் எடுத்து சென்று அங்கு வெளியிட்டார்.. மேலும் அங்கு அவரது நண்பர்களான அரவிந்த் கோஷ் மற்றும் சுப்பிரமணிய சிவா வும் புதுச்சேரிக்கு இடம் பெயர்ந்தனர். 

 அப்போது முதல் உலகப் போர் நடந்து கொண்டிருந்த வேளையில்  வெளிநபர்கள் இந்தியாவிற்குள் வருவதையும் உள்ளே இருப்பவர்கள்  வெளி இடத்திற்கு செல்வதையும் தடை விதிக்கப்பட்டிருந்தது.. 

 "காந்தி 1919 feb  மாதம் சென்னை வந்தபோது ராஜாஜி வீட்டில் தங்கியிருந்தார் அப்போது ராஜாஜி வீட்டிற்கு பாரதியார் வந்தார்..முதன்முறையாக காந்தியை சந்தித்தார்.

இறப்பு:

  பாரதி  12.9.1921 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்..  அவருடைய இறுதிச் சடங்கில் 14 நபர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.. 


பொன் மொழிகள்:

  1.வாழ்க நிரந்தரம்  வாழ்க தமிழ்மொழி

  வாழிய வாழியவே! 


2. நெஞ்சினில் உரமுமின்றி

 நேர்மைத் திறமுமின்றி

  வஞ்சனை சொல்வாரடி கிளியே!! 


3. பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்வோம்! 

  எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்! 


4. "வானை அளப்போம் கடல் மீனை அளப்போம்

 சந்திரமண்டலத்தில் கண்டு தெளிவோம்"


5. வெள்ளி  பனி மலையின் மீது உலாவுவோம்-அடி

 மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்!! 


6. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு- நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு


7. சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!! 


8. பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்!! 


9. விடியாது பெண்ணாலே என்று கூறியவர் பாரதியார்


10. காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாடியவர் பாரதியார்


11. தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்வோம்


12." காற்றே வா "என்ற பாடலை பாடியவர் பாரதியார்


13. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்


14. பல சித்தர்களில் நானும் ஒரு சித்தன் என்று கூறியவர்


 சிறப்பு பெயர்கள்:

(1. சிந்துக்குத் தந்தை

2. அறம் பாட வந்த அறிஞன்

3. மறம் பாட வந்த மறவன்

4. செந்தமிழ்த் தேனீ  என இந்தப் பெயர்களை  பாரதிதாசன்  பாரதிக்கு அளித்தார்) 


5. பழமொழிகள் கற்ற கவிஞர் பாரதியார்

6. தமிழ் கவி

 7.தேசிய கவி

Post a Comment

Previous Post Next Post