Pandiyarkalin Aatchi Varalaru Important Notes In Tamil Free Download

 பாண்டியர்கள்

 (Pandiyarkalin Aatchi Varalaru Important Notes)




(இப்பாடப்பகுதி அரசு தேர்வு எழுதும் மாணவர்களுக்காக தயாரிக்க பட்டுள்ளது.. ) 
இப்பாடப்பகுதி பிற்கால பாண்டிய மன்னர்களின் முக்கியமான தகவல்கள் வரிசை முறையில் உருவாக்கப்பட்டு கொடுக்க பட்டுள்ளது.. முற்காலத்தில் ஆட்சி செய்த பாண்டிய மன்னர்கள் அப்போது இருந்த குமரி கண்டத்தை தலைநகராக வைத்து மாபெரும் பேரரசாக ஆட்சி செய்தனர்.. அதில் ( ஆரிய படை கடந்த நெடுஞ்செழியன் மற்றும் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் முதலானோர் சிறப்பு மிக்க ஆட்சி செய்தனர்) 
பிற்காலத்தில் ஆட்சி செய்த பாண்டியர்கள் தற்கால மதுரையை ஆட்சி செய்தனர்.. 
பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கிடையேயும் அடிக்கடி போர் நடந்தது..

                 தென்பகுதி ஆட்சி செய்து வந்த மூவேந்தர் மரபில் பாண்டியரும் ஒருவர்.அசோகன் கல்வெட்டில் சேரர்  சேரர் சோழர் பாண்டியர் சித்திரபுத்திரர் ஆகியோரை தென் இந்தியாவின் ஆட்சியாளராக குறிப்பிடுகிறார்.

      தொடக்ககால பாண்டியர்களின் தலைநகரமாக விளங்கியது பிற்காலத்தில் அவர்கள் மதுரைக்கு இடம் பெயர்ந்தனர்.

       மதுரையின் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பாண்டியர்களின் தொடக்க கால கல்வெட்டுக்கள் காணப்படுகிறது இவற்றில் மதுரை என்பது மதிரை என குறிப்பிடப்பட்டுள்ளது.. 

    தமிழ் செவ்விலக்கியங்கள் மதுரை கூடல் என சுட்டுகின்றன இச்சொல்லுக்கு கூடுகை என்று பொருளாகும்

    புலிமான்கோம்பை கல்வெட்டில் என்ற சொல் குறிப்பிடப்பட்டுள்ளது பத்துப்பாட்டு நூல்களில் ஆன பட்டினப்பாலையும் மதுரைக்காஞ்சியும் கூடல் பாண்டியர் தலைநகரம் குறிப்பிடப்பட்டுள்ளது. எட்டுத்தொகை  நூல்களிலும் இச்சொல் காணப்படுகிறது. வரலாற்று பூர்வமாகவே மதுரை கூடல் அழகிய சொல்லாடல் ஒன்றுக்கொன்று மாற்றுசொல் கையாளப்பட்டு வருகிறது.

 சான்றுகள்:

               சங்ககால பாண்டியர் வரலாறு கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 2 ஆம் நூற்றாண்டு வரை குறிப்பிடப்படுகிறது. பெருங்கற்கால பொருட்கள் கண்டுபிடிப்பு, தமிழ் பிராமிக் கல்வெட்டு, சங்க இலக்கியப் பாடல்கள் போன்ற பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் மூலம் சங்ககால பாண்டியர் வரலாறு  கூறுகிறது. மார்க்கோபோலோ, வாசஃப், இபின் பதூதா போன்ற பயணிகள் எழுதிய வரலாற்றுக் குறிப்புகள் அக்காலகட்ட அரசியல் சமூக பண்பாட்டு வளர்ச்சி குறித்து அறிய உதவுகிறது. பாண்டியர் கோவை, மதுரை தல வரலாறு, மதுரை திருப்பணிமாலை ஆகிய இலக்கியங்கள் மதுரையை ஆண்ட பிற்கால பாண்டியர் குறித்த செய்திகளை வழங்குகிறது.

    கிபி 7ஆம் 8ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த இறையனார்  அகப்பொருளில் சங்கம் என்ற சொல் கலைக்கழகம் என்ற பெயர் இடம்பெற்றுள்ளது ஆனால் பல்லவர்களுக்கு  முந்தைய இலக்கியங்களில்  சங்கம் என்ற சொல் குறிப்பிடப்படவில்லை . திருவிளையாடல் புராணம் பெரியபுராணம் ஆகிய பிந்தைய இடைக்கால நூல்களில் சங்கம் என்ற சொல் கலைக் கழகம் என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆட்சிப் பகுதி:

           பாண்டியரின் ஆட்சிப்பகுதி பாண்டிய மண்டலம் தென் மண்டலம் பாண்டிய நாடு என்று அழைக்கப்படுகிறது.  புதுக்கோட்டை வழியாக ஓடும் வெள்ளாற்று பாண்டிய நாட்டின் வட எல்லையாகத் இந்திய பெருங்கடல் தென் எல்லையாகவும் மேற்கு தொடர்ச்சி மலைகள் மேற்கு வங்காளத்தில் கிழக்கு எல்லையாகும் அமைந்திருந்தன.


  பாண்டியரின் மறுமலர்ச்சி:

 களப்பிரரின் மறைவிற்குப் பின் பாண்டியரின் மறுமலர்ச்சி ஏற்பட்டதாக தெரிகிறது. களப்பிரர்கள் தொடக்கத்தில் மலைவாழ் பழங்குடிகள் ஆக இருந்து பின் சமவெளியில் குடியேறினார்கள் .அவர்கள் புத்த  சமண சமயங்களை ஆதரித்தனர்.  களப்பிரர்கள் இடமிருந்து பாண்டியர் பகுதியை  கடுங்கோன் மீட்டதாக செப்பேடுகள் மூலம் அறியமுடிகிறது.


 சேந்தன்:

          சேந்தன் என்பவர்   போர் முறையோ சிறந்தவராக இருந்துள்ளார்  என்பதால் அவர்  வானவன் என பட்டம் பெற்றார் என செப்பேடுகள் கூறுகின்றன.


 அரிகேசரி மாறவர்மன்:

           இவர் தொடக்க காலப் பாண்டிய  அரசர்களில் சிறந்தவராக   விளங்கினார். இவர் இவரை சமண மதத்திலிருந்து சைவ மதத்திற்கு திருஞானசம்பந்தர் மாற்றினார். அரிகேசரி மாறவர்மன் சமகாலத்தவர் முதலாம் மகேந்திரவர்மன் முதலாம் நரசிம்மவர்மன். சமணர்களை கழுவேற்றிய கூன் பாண்டியன் அரிகேசரி என அடையாளம் காணப்படுகிறார். அரிகேசரி தொடர்ந்து கோச்சடையான் ரணதீரன் அவருக்குப்பின் மாறவர்மன் ராஜசிம்மன் ஆட்சி செய்தனர்.

 

 ஜதில பராந்தக நெடுஞ்சடையன்:

         

            இவர் முதலாம் வரகுணன் என்றும் அழைக்கப்படுகிறார்.  இவரே புகழ்பெற்ற   வேள்வி நிலக்கொடை அளித்தவர் ஆவார். பாண்டிய அரச மரபில்  மிகவும் சிறந்தவராக விளங்கினார். பல விஷ்ணு கோயில் களை கட்டிய பெருமையும் இவருக்கு உண்டு. இவர் பாண்டிய அரசை தஞ்சாவூர் திருச்சிராப்பள்ளி சேலம் கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளுக்கு விரிவுபடுத்தினார்.


 ஸ்ரீ மாற ஸ்ரீ வல்லவர்:


 இவர் இலங்கை மீது படையெடுத்து தனது அதிகாரத்தை நிலை நிறுத்தினார். பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனிடம் தோற்றார்.



 அடுத்ததாக ஆட்சிக்கு வந்த இரண்டாம் வரகுணன் திருப்புறம்பியம் போரில் அபராஜித பல்லவன் தோற்கடிக்கப்பட்டார். இவருக்குப் பின் ஆட்சிக்கு வந்த பராந்தகன் வீர நாராயணன், இரண்டாம் ராஜசிம்மன் ஆகியோரால் முதலாம் பராந்தகனின் தலைமை தோன்றிய சோழரின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியவில்லை .எனவே அவனிடம் தோற்ற இரண்டாம் ராஜசிம்மன் 920 நாட்டை விட்டு ஓடினார்.


 மீண்டும் பாண்டிய எழுச்சி:


             பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் அதி ராஜேந்திர சோழனின் மறைவிற்குப் பின் சோழர்கள் வெற்றிடம் ஏற்பட்டது .எனவே இது பாண்டியன் எழுச்சிக்கு காரணமாக அமைந்தது. இரண்டாம் ராஜராஜ  சோழனுடன் போரிட்ட ஸ்ரீவல்லப  பாண்டியன் தன் மகனைப் பறி கொடுத்தார். அதற்குப்பின் 5 பாண்டிய குறுநில மன்னர்கள் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு முதலாம் குலோத்துங்கன் போரிட்டார்கள். ஆனால் போரில் அவர்களுக்கு தோல்வியே கிடைத்தது . 1190 சடையவர்மன் ஸ்ரீவல்லபன் முதலாம் குலோத்துங்கனின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு முடிசூடிக்கொண்டார் இந்த நிகழ்வின் நினைவாக சுந்தர சோழ சதுர்வேதி மங்கலம் இறையிலி பிராமணர்களுக்கு வழங்கினார்.  சோழர்களின் வீழ்ச்சி பிறகு 13ம் நூற்றாண்டில் பாண்டியர் செல்வாக்கு மிக்க அரச மரபினர் மாறினார்கள். மதுரை தலைநகரமாக விளங்கியது. மார்க்கோ போலோ என்ற புகழ்பெற்ற   பயணி  1288 , 1293 ஆகிய இரு முறை காயலுக்கு வந்துள்ளார்.  காயல் முழுவதும் அரேபிய சீனக் கப்பல்கள் நிறைந்ததாகவும்   காயல் நகரம் சிறந்த மயமாக விளங்கியதாகவும் கூறுகிறார்.


 சடையவர்மன் சுந்தரபாண்டியன்:


             இரண்டாம் பாண்டிய அரசின் சிறப்பு மிக்க ஆட்சியாளர் சுந்தரபாண்டியன் ஆவார் .இவர் பொன் வேய்ந்த பெருமாள், எம் மண்டலமும் கொண்டருளிய சுந்தரபாண்டியன் என்றும் அழைக்கப்படுகிறார் .இவர் போஜ அரசன் வீர சோமேஸ்வரன் எதிராகப் போரிட்டு கண்ணூரில் நடந்த போரில் வெற்றி பெற்றார். காஞ்சிபுரம் அரசரைக்  கொன்று அதையும் எடுத்துக் கொண்டார்.  கடலூரை மையமாக கொண்டு வட தமிழகத்தில் செல்வாக்குடன் ஆட்சி நடத்தி அவர்களையும் அடக்கினார். இவர் தனது பகுதியை முழுமையாக ஆட்சி செய்யாமல் அதனை   விக்ரம பாண்டியன், வீரபாண்டியன் ஆகிய இருவருடன் சேர்ந்து ஆட்சி புரியும்படி செய்தார்.


 மாறவர்மன் குலசேகரன்:


       இவர் கொல்லம் கொண்ட பாண்டியன் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார் .இவர் 40 ஆண்டுகள் பாண்டிய நாட்டை வெற்றிகரமாக ஆட்சி புரிந்தார். அவருக்கு இரு மகன்கள் மூத்தமகன் சுந்தரபாண்டியன் இளையவர் வீரபாண்டியன்.  இளைய மகன் வீரபாண்டியனுக்கு இளவரசு பட்டம் சூட்டப்பட்டது.இதனால் கோபமடைந்த மூத்தமகன் சுந்தர பாண்டியன் தனது தனது தந்தையைக் கொன்று பதவிக்கு வந்தார். இதனைத் தொடர்ந்து மூண்ட உள்நாட்டுப் போரினால் வீர பாண்டியன்  ஆட்சியைப் பிடித்தார். சுந்தரபாண்டியன் டெல்லிக்கு  அலாவுதீன் கில்ஜி இடம் அடைக்கலம் . ஆனால் இந்த நிகழ்வே மாலிக்கபூர் தமிழகம் மீது படையெடுக்க காரணமாக அமைந்தது.  



              மாலிக்கபூர் 1311மதுரையை அடைந்த போது அங்கு யாரும் இல்லை .வீரபாண்டியன் ஏற்கனவே தப்பியோடி இருந்தார். இந்த மதுரை படையெடுப்பு குறித்து ஆலாவுதீன் கில்ஜியின் அரசவைக் கவிஞர் குழுவின் கருத்துப்படி அங்கிருந்து 512 யானைகள் 5,000 குதிரைகள் 500 மூட்டைகளில் வைரமுத்து மரகதம் மாணிக்கம் நகைகள் போன்றவை எடுத்துச் செல்லப்பட்டது என அறியமுடிகிறது .அந்த செல்வத்தைப் பயன்படுத்தி அலாவுதீன் கில்ஜி தனது எதிரிகளை தன்பக்கம் ஈர்த்து தனது பலத்தை அதிகரித்துக் கொண்டார்.  சொக்கநாதர் கோயிலை இடித்து ஏராளமான விலை மதிக்க முடியாத பொருட்களையும் மாலிக்கபூர் எடுத்துச் சென்றார். பிறகு டெல்லி சுல்தானின் கட்டுப்பாட்டுக்கு சென்றது. இது 1335 வரை தான் நீடித்தது மதுரையை ஆட்சி செய்த ஆளுநர் ஜலாலுதீன் டெல்லி சுல்தானுக்கு கட்டுப்படாமல் 1335 மதுரை தனி அரசாக அறிவித்துக் கொண்டார்.

Post a Comment

Previous Post Next Post