Arignar Anna(C.N Annadurai) Tamil Important Notes Free Download

 அறிஞர் அண்ணா

( Arignar Anna(C.N Annadurai) Tamil Important Notes Free Download)



 கடமை, கண்ணியம் ,கட்டுப்பாடு

             

  பிறப்பு :15 sep 1909, காஞ்சிபுரம்

   பெற்றோர்:நடராஜன்- பங்காரு அம்மாள்

வளர்ப்பு தாய்:       ( சித்தி )ராசாமணி

#தென்னாட்டின் பெர்னாட்ஷா என கல்கி கிருஷ்ணமூர்த்தி அழைத்தார்

#அறிஞர் -பாரதிதாசன்

 மனைவி: ராணி அம்மையார் 1930 திருமணம்


 கல்வி: பச்சையப்பர் பள்ளி மற்றும் பச்சையப்பன் கல்லூரி M.A (பொருளியல்)


 பேராசிரியர் வரதராஜன் வெங்கடசாமி மூலம் அண்ணா நீதி கட்சி பற்றி தெரிந்து கொண்டார்.


1931 நீதிக்கட்சியின் மீது ஆர்வம்.


1934 or 1935 நீதி கட்சியில் இணைந்தார்.


1936   பாசுதேவ் நடத்திய பாலபாரதி எனும்  இதழுக்கான பொறுப்பு அண்ணாவுக்கு வழங்கப்பட்டது.


 அண்ணா நீதி கட்சியில் இணைய காரணமாக இருந்த அரசியல் இரட்டையர்கள் பாலசுப்பிரமணியன்  டீ. வி.நாதன்.


 1935திருப்பூரில் செங்குந்தர் மாநாடு நடைபெற்றது இதில் அண்ணா பெரியாரை  சந்தித்தார்.

அண்ணாவிற்கு பெரியாரின் கருத்துகள் மிகவும் பிடிக்கும்.


 அண்ணாவின் முதல் தேர்தல் நீதிக் கட்சி சார்பாக 1936இல்   பெத்த நாயகன்  பேட்டை  தொகுதியில் போட்டியிட்டார் ஆனால் அவரை வெற்றிபெற இயலவில்லை தோல்வி அடைந்தார்.


 1937சுயமரியாதை மாநாடு துறையூரில் நடைபெற்றது.  இந்த மாநாட்டிற்கு அண்ணா தலைமை தாங்கினார்.குடியரசு மற்றும் விடுதலை ஆகிய பத்திரிக்கையில் அண்ணா பணியாற்றினார்.


1937  ராஜாஜி தமிழகத்தின் முதல்வராக இருந்தபோது பள்ளிகளில் இந்தி கட்டாயம் எனும் முறையை அறிமுகப்படுத்தினார் இதை எதிர்த்து 1937 இந்தி எதிர்ப்பு போராட்டம் பெரியார் தலைமையில் நடைபெற்றது. இதற்காக 1938 பெரியாருக்கு ஒரு வருடம் சிறையும் அண்ணாவிற்கு நான்கு மாத சிறை தண்டனை வழங்கப்பட்டது.


 1939 அண்ணா நீதிக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார்.


 1941 பெரியார்  ஹரிதுவார் பயணம் மேற்கொண்டார். பெரியாருடன் மொழிபெயர்ப்பாளராக அண்ணா சென்றார்.


 1944 ஆகஸ்ட் 27  சேலம் மாநாட்டில் நீதிக்கட்சி என பெயர் மாற்றம்  அண்ணாவால்  அறிமுகப் படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.


 1942 மார்ச் 8 திராவிடநாடு எனும் வார இதழ் தொடங்கப்பட்டது.


 புனைப்பெயர்கள்:


         சௌமியான், பரதன், ஒற்றன், நக்கீரன், சம்மட்டி ,சமதர்மன், வீனஸ்,   குறிப்போன், ஆணி, வீரன்.


 நூல்கள்:


       முதல் கட்டுரை: 1931 (பெண்கள் சமத்துவம் )  தமிழரசு எனும்  பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது.

 முதல் சிறுகதை :1934 ஆனந்த விகடன் (கொக்கரக்கோ)

 முதல் கவிதை: 1937 விடுதலை பத்திரிக்கையில் (காங்கிரஸ் ஊழல்)

 முதல் சிறுநாவல்:1939 குடியரசு பத்திரிகையில் (கோமளத்தின் கோபம்)

   முதல் நாவல்:1940 (வீங்கிய உதடு) குடியரசு பத்திரிக்கை


 அண்ணாவை நீதிக்கட்சியின் மூளை என வரதராஜலு நாயுடு அழைத்தார்.


1943 April 25  நீதிக்கட்சியின் திருச்சி மாநாட்டிற்கு அண்ணா தலைமை தாங்கினார்.


1947 August 15 இந்திய சுதந்திர தினத்தை இன்ப தினம் எனக் கூறினார். ஆனால் பெரியார் இதை துக்க தினம்  எனக் கூறினார்.


1948  பெரியார் மற்றும் அண்ணா  ஹிந்தி எதிர்ப்பு போராட்டம்.

1949 July 9  பெரியார் திருமணம். அண்ணாவுக்கும் பெரியாரும் இடையே கருத்து வேறுபாடு. எனவே 1949 sep 17  திராவிட முன்னேற்றக் கழகம் தொடக்கம்.


1953  ராஜாஜி ( மாறுபட்ட தொடக்கக் கல்வித் திட்டம்)குலக்கல்வித் திட்டம் அறிமுகப் படுத்தினார்.


 திராவிட முன்னேற்றக் கழகம் 1952 தேர்தலில் பங்கேற்கவில்லை.

 

1957  தேர்தலில் 15 இடங்களில் வெற்றி பெற்றது.


1962 தேர்தலில் 50 இடங்களில் வெற்றி பெற்றது


 1967 நடைபெற்ற தேர்தலில் 138 இடங்களில் வெற்றி பெற்றது திமுக ஆட்சியைக் கைப்பற்றியது. அண்ணா முதல்வராக பொறுப்பேற்றார்.


 அண்ணாவின் ஆட்சியின் சாதனைகள்:


     1967 March 15  படி அரிசி திட்டம் கோயம்புத்தூர் மற்றும் சென்னை. ரூபாய் ஒரு படி. மூன்று படி லட்சியம் ஒரு படி நிச்சயம்.


  ஜமீன் முறை நீக்கப்பட்டு இலவச பட்டாக்கள் வழங்கப்பட்டது.


 நில உச்சவரம்பு 30 ஏக்கரில் இருந்து 15 ஆக குறைந்தது.


  அண்ணாவின் கருத்து விஞ்ஞான சோசலிசம்.


 முதல் வீராணம் குடிநீர் திட்டம்-1967


 1967 ஜூலை தொழிலாளர் எழுச்சி நாள்.


28 Nov 1967 சுயமரியாதைத் திருமணச் சட்டம். (நடைமுறை:1968 Jan 21)


  மதராஸ் என்பது தமிழ்நாடு என்று பெயர் மாற்றம்  சட்டம் 1968.

 சென்னை சட்டமன்றத்தில் தீர்மானம் 1967 ஏப்ரல் 16.

 நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1969 ஜனவரி 14.

 மெட்ராஸ் தமிழ்நாடு என பெயர் மாற உண்ணாவிரதம் இருந்தவர் சங்கரலிங்கனார்(1956 July 27 to aug 13)



1968 Jan3  இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு சென்னை.


1968 Jan 23இருமொழிக் கொள்கை.


 சித்திரை 1 தமிழ் வருட பிறப்பு என 14. 4.1967 அறிவித்தார்.


 75 மைல் தொலைவில் உள்ள போக்குவரத்து சாலைகள் தேசியமயமாக்கப்பட்டது. 


 ஸ்ரீமதி, ஸ்ரீ  என்பது  திருமதி, திரு அழைக்கப்பட்டது


 சத்தியமேவ ஜெயதே- வாய்மையே வெல்லும்


  செக்ரிடரியட்-  தலைமைச் செயலகம்.


 குடிசை மாற்று வாரியம் உருவாக்கப்பட்டது.

إرسال تعليق

أحدث أقدم