பெரியார்
( Periyar E. V. Ramasamy Tamil Important Notes Free Download)
* பெரியார் செப்டம்பர்17,1879 ஆம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தார்.
* இவரின் இயற்பெயர் ஈரோடு வேங்கட்ட ராமசாமி நாயக்கர் ஆகும்.
* இவரின் தந்தை வேங்கடப்ப நாயுடு, தாய் சின்ன தாயம்மாள் ஆவர்.
* திராவிட கழகத்தை தோற்றுவித்தவர் பெரியார்.
* இவர் சாதியை ஒழிப்பதற்க்காகவும்,பெண் விடுதலைக்காகவும் போராடியவர்.
* இவருக்கு கிருஷ்ணசாமி என்ற சகோதரனும், கண்ணம்மா மற்றும் பொன்னுதாயி என்ற சகோதரிகளும் உள்ளனர்.
* பெரியார் 19 வயதில் திருமணம் செய்து கொண்டார்.இவரின் மனைவி மணியம்மை ஆவார்.
கல்வி:
* பெரியார் தன்னுடைய படிப்பை ஐந்தாம் வகுப்பு வரை நிறுத்தி கொண்டார்.
* 1902 ஆம் ஆண்டு கலப்பு திருமணங்களை நடத்தி வைத்தார்.
* இவர் தந்தை பெரியார் எனவும்,தென்னிந்தியாவின் சாக்ரடீஸ் எனவும், பகுத்தறிவு பகலவன் எனவும்,ஈ.வே. ரா. எனவும் அழைக்கப்படுகிறார்.
அரசியல்:
* 1922 ஆம் ஆண்டு சென்னை மாகாண காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* பின் 1925 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.
* 1925 ஆம் ஆண்டு சுய மரியாதை இயக்கத்தை தொடங்கினார்.
* 1930இல் தேவதாசி ஒழிப்பு மசோதா கொண்டு வர துணை நின்றவர் பெரியார் ஆவார்.. மசோதா நாடாளுமன்ற உறுப்பினரான 1926 இல் நீதிக்கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.
1938 நவம்பர் 13 அன்று சென்னையில் நடந்த மகளிர் மாநாட்டில் பெரியாருக்கு டாக்டர் தர்மாம்பாள் அவர்கள் " பெரியார் " என்ற பட்டத்தைக் கொடுத்தார். இந்த மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர் மறைமலை அடிகளாரின் மகள் நீலாம்பிகை அம்மையார் ஆவார்.
* 1939 ஆம் ஆண்டு நீதிக்கட்சி தலைமை பொறுப்பை ஏற்றார்.
1944 September ஆம் ஆண்டு "நீதிக்கட்சி" என்ற பெயரை "திராவிட கழகம்" என்று பெயர் மாற்றம் செய்தார். பெயர் மாற்றம் செய்வதற்கான தீர்மானத்தை முன்மொழிந்தவர் சி.என்.அண்ணாதுரை யார்..
* 1962 ஆம் ஆண்டு திராவிட கழகத்தின் பொது செயலாளராக கி. வீரமணியை நியமித்தார்.
* 1973 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி பெரியாருக்கு "யுனெஸ்கோ விருது" வழங்கப்பட்டது.
* கேரளாவில் வைக்கம் (1924)என்னும் இடத்தில் போராட்டத்தில் இருந்து "வைக்கம் வீரர்" என அழைக்கப்பட்டார்.
* கதரின் பயன்பாட்டை மேம்படுத்தி அதன் விற்பனையை அதிகரிக்க தீவிரமாக செயல்பட்டார்.
* கேரளாவின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் ஈ.வே. ரா. அங்கு சென்று அவ்வியக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார்.
* அவர் கைது செய்யப்பட்டு ஒரு மாத கால சிறை தண்டனை வழங்கப்பட்டது.
* விடுதலை செய்யப்பட்ட பின்னரும் வைக்கத்தை விட்டு வெளியேற மறுத்தார்.
* 1925 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் தேதி வைக்கத்தில் கோவிலை சுற்றியிருந்த வீதிகளில் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.
* 1925ஆம் ஆண்டு நவம்பர் 21ல் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டி மாநாட்டில் அவர் சட்ட சபையில் பிராமணர் அல்லாதோருக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் எனும் கோரிக்கையை முன் வைத்தார். ஆனால் அதனை காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் ஏற்றுக்கொள்ளாததால் பெரியார் காங்கிரஸிலிருந்து வெளியே வர காரணமானது.
* சட்ட சபை போன்ற பிரதிநிதித்துவ அமைப்புகளில் பிராமணர் அல்லாதவர்களுக்கு இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட
வேண்டும் என்பதில் பெரியார் முனைப்புடன் இருந்தார்.
* பெரியார் ஈரோட்டின் நகரசபை தலைவர் பதவி (1918-1919) உட்பட பல பதவிகளையும் வகித்தார்.
* ஒத்துழையாமை இயக்கத்திற்கு ஆதரவாகத் தான் வகித்து வந்த அனைத்து அரசு பொறுப்புகளையும் பெரியார் ராஜினாமா செய்தார்.
* லாபம் தரும் தனது வணிகத்தை கைவிட்டு செயலார்வமிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஆனார்.
* பெரியார் தமிழ் எழுத்துக்களில் சீர்திருத்தம் செய்த நபர்களில் முக்கியமானவராக திகழ்ந்தார்.இதன் மூலம் தமிழ் எழுத்துக்களை குறைப்பதற்கு உதவியாக இருந்தார் இவரது எழுத்துக்கள் 1978 இல் தமிழக அரசு(Mr.M.G.R) நடைமுறைக்குக் கொண்டு வந்தது
* காதிக்கு துணை நின்ற அவர் தமிழகத்தின் வீதிகளிலே கதர் விற்பனை செய்தார்.
* மது விலக்கு இயக்கத்திற்கு (1921) ஆதரவாக தனது தோப்பிலிருந்த 500 தென்னை மரங்களை வெட்டினார்.
* பெரியார் 13 வருடங்களில் 15 முறை சிறை சென்றதால் அவருக்கு "சிறைப்பறவை" எனும் சிறப்பு பெயர் பெற்றது
பெரியாரின் பத்திரிகைகள்:
* குடியரசு (1925), ரிவோல்ட (1928), புரட்சி (1933), பகுத்தறிவு (1934), விடுதலை (1935) , உண்மை (1970) போன்ற பல செய்தி தாள்களையும் இதழ்களையும் பெரியார் தொடங்கினார்.
இதில் பெரியாரின் புரட்சிகர கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக குடியரசு, புரட்சி, விடுதலை ஆகிய பத்திரிகைகளை பயன்படுத்திக் கொண்டார்
* சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித்தாள் குடியரசு ஆகும்.
மேலே உள்ள Notes PDF வடிவில் Download செய்வதற்கு 👇👇👇👇👇👇👇👇