குண்டர் சட்டம் என்றால் என்ன?
**தமிழ்நாடு வன் செயல்கள் தடுப்புச் சட்டம்
*இச்சட்டம் இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமே நடைமுறை படுத்தினார்
*1982 ல் இச்சட்டம் TN ல் நடைமுறை படுத்தினார்
*வன் செயல் தடுப்புச் சட்டத்துக்கு கீழ் வன் செயல்கள் மற்றும் கள்ளச்சாராய வணிகங்கள் , வனச்சட்டத்தை மீறுபவர்கள் , சமுதாய விரோத செயல்கள் ஈடுபடுபவர்கள் , பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் குற்றவாளிகள், குண்டர்கள் இவற்றை தடுக்க கொண்டு வந்த சட்டம் தான் இது.
*2004ஆ திருட்டு வீடியோ, சி. டி. குற்றமும்
*2006ஆ மணல் கடத்தல் மற்றும் குடிசை நில அபகரிப்பு குற்றங்களும் சேர்க்கப்பட்டன.
*கைது செய்யப்படும் நபர் மீது எவ்வித நீதிமன்ற விவிசாரணையும் நடத்த வேண்டியதில்லை .
*ஒரு வருடம் கட்டாய சிறை தண்டனை உண்டு
*அவர்களுக்கு பிணை(ஜாமீன்) வழங்கப்படாது.
*அவர்கள் மேல் எந்த குற்றமும் இல்லாத பட்சத்தில் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி , ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி, ஒரு அமர்வு நீதிபதி ஆகியோரைக் கொண்ட குழுவை அணுகித்தான் முறையீட முடியும்.
⚡️எடுத்துக்காட்டாக :தூத்துக்குடியில் ஒரே நாளில் 4பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
அதிகாரம் கொண்டவர்கள்
*நகர்ப்புறங்களில் காவல்துறை ஆணையரிடம்ஆணையரும்,
*கிராம புறங்களில் மாவட்ட ஆட்சியரும் இந்த சட்டத்தை செயல் படுத்தலாம்.
*இந்தியக் குற்றவியல் சட்டத்தின் படி குண்டர்கள் என்ற வார்த்தையை குறித்து விளக்கும் போது சட்டப்பிரிவு 16,17,22,45 ஆகியவற்றின் கீழ் வரும் குற்றம் எதையாவது செய்யக்கூடியவர் (அ) செய்யக்கூடிய குழுவைச் சேர்ந்தவர் என்று கருதினாலே அவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க முடியும்.
ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி விற்றால் குண்டர் சட்டம் பாயும் என முதல்வர் மு. க. ஸ்டாலின் எச்சரிக்கை