Indian National Movement _Gandhi Era _ சுயமரியாதை இயக்கம்



*விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு* 


1. வங்காளத்தில் நிலையான நிலவரி திட்டம் கொண்டு வந்த கவர்னர் ஜெனரல் - காரன்வாலிஸ் பிரபு.‌

2. ஆங்கிலேயர் காலத்தில் வகுப்புவாரியின் தந்தை - மின்டோ பிரபு. 

3. மகல்வாரி முறையில் மகல் என்றால் கிராமம் என்று பொருள். 

4. மகல்வாரி முறை பஞ்சாப் மாகாணத்தில் முதல்முறை அறிமுகம் செய்யப்பட்டது. 

5. பஞ்சாப் விவசாயிகளை பாதுகாக்க பஞ்சாப் நிலவுரிமை மாற்றுச் சட்டம் 1900ல் நிறைவேற்றப்பட்டது. 

6. வரிகொட சத்தியாகிரகம் பர்தோலி (குஜராத்) சர்தார் வல்லபாய் பட்டேல் பிப்ரவரி 1922ல் நடைபெற்றது. 

7. மாப்ளா கலகம் 1921ல் கேரளாவில் நடைபெற்றது. 

8. மகல்வாரி முறையை அறிமுகப்படுத்திய கவர்னர் வில்லியம் பெண்டிங் பிரபு. 

9. நீல்தர்பன் நாடகத்தை வங்க மொழியில் தீன் பந்து மித்ரா எழுதினார். 

10. தக்காண கலகம் 1875ல் பூனா மாவட்டத்தில் ஏற்பட்டது. 

11.வங்காளத்தின் பாப்னா கலகம் 1873 - 76. கேசப் சந்திர ராய், யூசுப் சாஹி பர்கானா ஆரம்பித்தார்.

12. இன்டிகோ கிளர்ச்சி திகம்பர விஸ்நாத், விஷ்ணு சரண் பிஸ்வால் தலைமையில்  1859ல் வங்காளம் நாடியா மாவட்டத்தில்  முதன்முதலாக நடத்தப்பட்டது. 

13. வீரபாண்டிய கட்டபொம்மன் தனது அமைச்சர் சிவசுப்பிரமணியத்துடன் 1798ல் இராமநாதபுரம் கலெக்டரை சந்தித்தார். 

14. தென்னிந்திய கிளர்ச்சியாளர்கள் கூட்டமைப்பு மருது சகோதரர்கள் உருவாக்கப்பட்டது.

15. தென்னிந்தியாவின் ஜான்ஸி ராணி வீரமங்கை வேலுநாச்சியார்.‌

16. தீரன் சின்னமலை பிறந்த ஊர் மேலப்பாளையம் (சென்னிமலைக்கு அருகில்) இயற்பெயர் - தீர்த்தகிரி.‌

17. பாண்டிச்சேரியில் வெளிவந்த சூர்யோதயம் (1907) பத்திரிக்கையின் ஆசிரியர் நீலகண்ட பிரம்மச்சாரி. 

18. ஜான்ஸி ராணி லட்சுமி மத்திய இந்தியா போராட்டத்தை வழிநடத்தினார்

19. 1529ல் பாளையக்காரர் முறை தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. 

20. விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை 01 நவம்பர் 1858ல் அலகாபாத்தில் கானிங் பிரபு வெளியிட்டார். 


----×----×---- 


*பெரியார்* 

                     


* ஈரோடு நகர சபை தலைவராக 1917-19. 

* காங்கிரஸ் கட்சியில் 1919ல் இணைந்தார்.‌

* 1921ல் சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டியின் தலைமை நிர்வாகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.‌

* 1923ல் சென்னை மாகாண காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். 

* 1921 கதர் ஆடை குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்.‌

* கள்ளுக்கடை மறியல் போராட்டம் 1922. 

* 1924 வைக்கம் (கேரளா இடுக்கி) போராட்டம். கைது செய்யப்பட்டு ஒரு மாதம் சிறை. மீண்டும் போராட்டம் நடத்தி ஆறு மாதங்கள் சிறை.‌

* 1925 ஜூனில் வைக்கம் பகுதியில் கோவிலைச் சுற்றியிருந்த தடை நீக்கப்பட்டது. 

* சேரன்மகாதேவி குருகுல பிரச்சினை. 

- வ.வே.சு ஐயர் நடத்திய குருகுலத்தில் இரட்டை பந்தி முறை நடைபெறுவதைக் கண்டித்து பெரியார், திரு.வி.க இருவரும் காங்கிரஸில் இருந்து வெளியேறினர். 

*சுயமரியாதை இயக்கம்* 

- பிராமணர் அல்லாதோருக்கானது. 

- நோக்கம் - சமய சடங்குகள் சம்பிரதாயங்கள் இல்லாத ஜாதிகளற்ற பிறப்பின் அடிப்படையிலான பாகுபாடற்ற ஒரு சமூகத்தை தோற்றுவிப்பது. 

- பகுத்தறிவும் சுயமரியாதையும் அனைத்து மனிதர்களின் பிறப்புரிமை என்று பிரகடனம் செய்தார்கள். 

- பெண்களின் தாழ்வான நிலைக்கு எழுத்தறிவின்மையே காரணம் என அறிவித்த இந்த இயக்கம் அனைவருக்கும் கட்டாய தொடக்க கல்வியை வழங்கும் பணிகளை மேற்கொண்டார்கள்.‌

- மூட நம்பிக்கைகளை ஒழித்தனர். 


                   


- பெண் விடுதலை கோருதல், பகுத்தறிவை வலியுறுத்துதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியது.‌

- சீர்திருத்த திருமணம், சுயமரியாதை திருமணங்களை ஆதரித்தது. 

- பிராமணர் அல்லாதோருக்காக மட்டுமல்லாமல் இஸ்லாமியர்களுக்காகவும் பாடுபட்டது. 

- இஸ்லாமின் மேன்மை மிகுந்த கோட்பாடுகளான சமத்துவம்,  சகோதரத்துவம் ஆகியவற்றை சுயமரியாதை இயக்கம் பாராட்டியது. 

- முஸ்லிம் உயர்குடியினர் தமிழ்நாட்டு முஸ்லீம்களை திராவிடர்களாகவே கருதினர். 

- முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது போன்ற சில பழக்கவழக்கங்களை பெரியார் விமர்சனம் செய்தார். 

- இஸ்லாம் சமூகத்தில் சீர்திருத்த முன்முயற்சி மேற்கொண்ட துருக்கியைச் சேர்ந்த முஸ்தபா கமால் பாட்சா, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அமானுல்லா ஆகியோர்களை திராவிட முஸ்லீம்கள் பின்பற்ற வேண்டும் என்று பெரியார் கூறினார். 

- 1970 ஜூன் 27 யுனெஸ்கோ பெரியாருக்கு வழங்கிய பட்டங்கள் - புத்துலக தொலைநோக்காளர், தென்கிழக்கு ஆசியாவின் சாக்கிரடீஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை. 

* பெரியார் அம்பேத்கர் உறவு 

- தென்னிந்தியாவின் முதல் பொதுவுடமைவாதி மா.சிங்காரவேலருடன் நெருக்கமான உறவு. 

- டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் எழுதிய ஜாதிய ஒழிப்பு என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தார். 


         


Post a Comment

Previous Post Next Post