01.03.24 - நடப்பு நிகழ்வுகள்
1.மாநில செய்தி
தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டில் 2,300 ஆக இருந்த புத்தாக்க தொழில் நிறுவனங்களின் (ஸ்டார்ட் அப்) எண்ணிக்கை, தற்போது 7,600 க்கும் மேல் உயர்ந்துள்ளதாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்தார்.
2. வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளான தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த கோ.சித்தருக்கு முதல் பரிசும், திருப்பூரை சேர்ந்த கே.வி.பழனிச்சாமிக்கு 2-வது பரிசும், காஞ்சிபுரத்தை சேர்ந்த கு. எழிலனுக்கு 3-வது பரிசாக மூவருக்கும் நம்மாழ்வார் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
3.கீழடியில் முதல், இரண்டாம் கட்ட அகழாய்வுகளில் மத்திய தொல்லியல் துறையினரால் கண்டறியப்பட்ட 5,765 பொருள்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
4. தமிழகத்துக்கு ரூ.5, 197 கோடி கூடுதல் வரிப்பகர்வு உள்பட 28 மாநிலங்களுக்கு
ரூ. 1,42, 122 கோடியை மத்திய அரசு விடுவித்தது.
5.தேசிய செய்திகள்
இந்தியாவில் சிறுத்தையின் எண்ணிக்கை கடந்த 2018-ம் ஆண்டு 12,852 ஆக இருந்த நிலையில், 4 ஆண்டுகளில் ஓராயிரம் அதிகரித்து கடந்த 2022-ஆம் ஆண்டு 13,874 ஆக உள்ளது.
6. மேற்கு வங்கத்தின் தீஸ்தாவில் உள்ள சோதனை களத்தில் பீரங்கிகளை தாக்கி அழிக்கும் (ஏடிஜிஎம்) பயிற்சியை ராணுவத்தின் கிழக்கு கட்டுப்பாட்டு தலைமையகம் மேற்கொண்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது.
7. வரும் 2024-25 ரபி சந்தைப்படுத்தல் பருவத்தில் 3-3,2 கோடி டன் வரையில் கோதுமையை கொள்முதல்
செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
8.மக்களவைத் தேர்தல் மற்றும் சில மாநிலங்களுக்கான சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு மத்திய காவல் படையை (சி ஏபி எஃப்) சேர்ந்த 3.4 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் மார்ச் 1 முதல் பாதுகாப்பு பரையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
9. எதிரி நாட்டு நீர் மூழ்கி கப்பல்களின் செயல்பாடுகளை முறியடிக்கும் திறனை அதிகரிக்கும் விதமாக ‘எம்ஹச் 60 ஆர் ஹெலிகாப்டர்' இந்திய கடற்படையில், கொச்சியில் 'ஐஎன்எஸ் கருடா' தளத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இணைத்து வைக்கிறார்.
10.பி.எம்.ஸ்ரீ (வளர்ந்து வரும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள்) திட்டத்தில் தமிழ்நாடு, ஒடிஸா, மேற்கு வங்கம், கேரளம், தில்லி ஆகிய மாநிலங்கள் இணையவில்லை.
11.நடப்பாண்டு காரீப் பருவத்துக்கு உர மானியமான ரூ.24,420 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
12. ரூ. 75,021 கோடி மதிப்பீட்டில் ஒரு கோடி வீடுகளில் மேற்கூரையில் சூரிய மின் உற்பத்தி தொடக்கம் பிப்ரவரி 13-ம் தேதி தொடங்கப்பட்டது.
13. மோரீஷஸில் புதிய விமான ஓடுதளம், படகு இறங்கு துறை மற்றும் 6 சமூக வளர்ச்சித் திட்டங்கள் ஆகிய இந்திய நிதியுதவித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி, மோரீஷஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் இணைந்து காணொலி மூலம் தொடங்கி வைத்தனர்.
14. விளையாட்டு செய்தி
நாட்டிலுள்ள பதிவு செய்யப்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கணைகளுக்கு எண்ம சான்றிதழ்களை அரசு வழங்கும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்தார்.