பொது அறிவு - புவியியல் - இயற்கை வளங்கள்
இயற்கையாகவே மனிதப் பயன்பாட்டிற்குப் புவியில் கிடைக்கும் பொருட்களே வளங்கள் என்றழைக்கப்படுகிறது.
மனிதன் உயிர் வாழ்வதற்கும், சொந்தத் தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்வதற்கும் இயற்கை வளங்கள் இன்றியமையாததாகிறது.
நிலம், நீர், காற்று மற்றும் கனிமத் தாதுக்களான இரும்பு, தங்கம், வெள்ளி, செம்பு போன்றவை உயிரற்ற வளங்களாகும்.
1. புவியோட்டின் மேற்பகுதியில் உள்ள பாறைகளை அரிப்பதன் காரணமாக உருவாகும் மிக நுண்ணிய துகள்களே ................ ஆகும். - மண்
2. விவசாயத்தின் வளர்ச்சியைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுவது எது? - மண்வளம்
3. மண் வளத்தை உருவாக்கும் காரணிகள் எவை? - முதன்மைப் பாறை, காலநிலை, நிலத்தோற்றம், காலம், இயற்கைத்தாவரம், விலங்கினம், நுண்ணுயிர்கள்.
4. ஒரு செ.மீ மண் உற்பத்தியாவதற்கு எத்தனை ஆண்டுகள் தேவைப்படுகிறது. -
நூற்றுக்கணக்கான ஆண்டுகள்
5. தமிழகத்தில் உள்ள மண் வகைகள் - வண்டல் மண், கரிசல் மண், செம்மண், துருக்கல் மண், உவர் மண்
6. தமிழகத்தில் உவர் மண் எங்கு அதிகமாக காணப்படுகிறது? - வேதாரண்யம்
7. தமிழக அரசு ................ மலரை சிறப்புமிக்க மலராக அங்கீகாரம் செய்து பெருமைப்படுத்தி உள்ளது? - குறிஞ்சி மலர்
8. மலேரியா நோயைக் கட்டுப்படுத்த, சின்கோனா மரத்திலிருந்து தயாரிக்கப்படும் மருந்துப் பொருள் எது? - குனைன்
9. வனவிலங்குகளின் முக்கியத்துவத்தை உணர்த்த ஒவ்வொரு வருடமும் ............... மாதத்தில், 'வன மகோத்சவம்" என்ற விழா கொண்டாடப்படுகிறது. - அக்டோபர்
10. உலக வனவிலங்கு தினம் - அக்டோபர் 4
11. உலக காடுகள் தினம் - மார்ச் 21
12. உலக நீர் தினம் - மார்ச் 22
13. பெரும்பாலான கனிமங்கள் .................ல் படிகங்களாக அமைந்துள்ளன. - பாறைகளில்
14. தமிழகத்தில் பெட்ரோலியம் எங்கு அதிகமாக காணப்படுகிறது? - திருவாரூர் (பனங்குடி), நரிமணம் (காவிரி டெல்டா பகுதி)
15. தமிழகத்தில் லிக்னைட் (நிலக்கரி) எங்கு அதிகமாக காணப்படுகிறது? - கடலு}ர் (நெய்வேலி)
16. சிட்டுக்குருவி தினம் - மார்ச் 20