குடிமையியல் (6th to 10th) பகுதி-1

1)  உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் பதவி ஓய்வு பெறும் வயது_______

A) 58       B) 60 C) 62        D) 65



2) பண மசோதாக்களை மாநில சட்டமன்றம் அறிமுகப்படுத்துவது_____

A) சபாநாயகரின் முன் ஒப்புதலுடன்

B) முதலமைச்சரின் முன் ஒப்புதலுடன்

C) ஆளுநரின் முன் ஒப்புதலுடன்

D) குடியரசுத் தலைவரின் முன் ஒப்புதலுடன்



3) இந்திய அரசியல் சாசனம் என்பது_______

A) எழுதப்பெற்றது

B) எழுத பெறாதது

C) நெகிழும் மற்றும் நெகிலாத் தன்மை உடையது

D) A மற்றும் C



4) இந்திய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது____

A) ஜனவரி 26, 1950

B) ஜனவரி 26, 1952

C) ஆகஸ்ட் 16, 1948

D) ஆகஸ்ட் 15, 1950



5) இந்திய திட்டக்குழுவின் முதல் துணைத்தலைவர் யார்?

A) ஜவஹர்லால் நேரு

B) டாக்டர். ராஜேந்திர பிரசாத்

C) வி.டி.கிருஷ்ணமாச்சாரி

D) சி. ராஜகோபாலாச்சாரி



6) ஒரு மாநில அரசாங்கத்தின் தலைவர் யார்? 

A) ஆளுநர்

B) பிரதம மந்திரி

C) முதல் மந்திரி

D) இவர்களில் யாருமில்லை



7) உச்சநீதிமன்றத்தின் ஒரு நீதிபதியை நியமிப்பது யார்?

A) பாராளுமன்றம்

B) குடியரசுத் தலைவர்

C) தலைமை நீதிபதி

D) அமைச்சர் குழு



8) ஒரு சட்டம் செல்லாது என்று கூறும் அதிகாரம் யாருக்கு உள்ளது?

A) செஷன்ஸ் நீதிமன்றம்

B) உயர்நீதிமன்றம்

C) உச்சநீதிமன்றம்

D) யாராலும் இயலாது



9) பாராளுமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொள்பவர்_________

A) தலைமை தேர்தல் அதிகாரி

B) சட்ட ஆலோசகர்

C) யாருமில்லை

D) மாநிலங்களின் ஆளுநர்கள்



10) கொள்கைகள் எதன் மூலம் செயலாக்கப்படுகிறது?

A) பாராளுமன்றம்

B) நீதிமன்றம்

C) செயலாட்சி மன்றம்

D) இவற்றுள் எதுவுமில்லை


11) ஒரு ஆளுநரின் பதவிக் காலத்தை நிர்ணயிப்பது யார்?

A) குடியரசுத் தலைவர்

B) தலைமை அமைச்சர்

C) முதலமைச்சர்

D) அரசியலமைப்புச் சட்டம்



12) பாராளுமன்ற இரு அவைகளிலும் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் அதிகபட்ச எண்ணிக்கை________

A) 10        B) 12 C) 14        D) 20



13) இந்திய பிரதம அமைச்சர்

A) மக்களவையினால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

B) பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு அமர்வினால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

C) குடியரசுத் தலைவரால் பதவியில் அமர்த்தப்படுகிறார்.

D) மக்களவையினால் தேர்ந்தெடுக்கப்பட்டு குடியரசுத் தலைவரால் பதவியில் அமர்த்தப்படுகிறார்.



14) மக்களவையின் அவைத்தலைவர்(சபாநாயகர்)

A) பிரதம மந்திரியின் ஆலோசனைப்படி குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்.

B) பிரதம மந்திரியால் நியமிக்கப்படுகிறார்.

C) மக்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

D) மக்களவையின் முன்னாள் அவைத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்.



15) குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடத் தேவையான குறைந்தபட்ச வயது_________

A) 30        B) 35 C) 40         D) 45



16) அரசியலமைப்பில் தற்போது எத்தனை பிராந்திய மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன?(1997ன் படி)

A) 14        B) 22   C) 16 D) 18



17) "சோஷலிச மதச்சார்பற்ற" என்ற வார்த்தைகள் எந்த திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டன?

A) 42        B) 43   C) 44 D) 45



18) குடியரசுத் தலைவரால் மாநிலங்களவைக்கு எத்தனை உறுப்பினர்களை நியமனம் செய்ய முடியும்?

A) 2           B) 3 C) 8          D) 12



19) இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடந்த ஆண்டு?

A) 1950               B) 1951            

C) 1952               D) 1953


20) குடியரசுத் தலைவரும், துணைக் குடியரசுத் தலைவரும் இல்லாத சமயத்தில் எவர் குடியரசுத் தலைவரின் பணியை செய்வார்?

A) தலைமை அமைச்சர்

B) சபாநாயகர்

C) ஆளுநர்

D) தலைமை நீதிமன்ற தலைமை நீதிபதி


إرسال تعليق

أحدث أقدم